சனி, ஆகஸ்ட் 17, 2013

வாக்காளர் பட்டியலில் நம்மை பற்றிய விவரங்கள் சரிபார்க்க

               நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.
               நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில் சோதித்துக்கொள்ளலாம்.

இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக் பண்ணுங்க.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


            வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள்.அடுத்து சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும்.நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.


அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.


தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

ஒட்டுப்போடுங்கள்.
ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

நன்றி: saravanagok

BS ஊடக இயக்கி (Media player)

               

             வீடியோக்கள் பார்க்க மிக அருமையான Player இந்த BS Player  நீங்களும் ஒரு முறை முயற்சித்துபாருங்கள்.

தரவிறக்க சுட்டி



திங்கள், ஆகஸ்ட் 12, 2013

விண்டோஸ் டெஸ்க்டாப்பினை லாக் செய்ய

            நாம் அவ்வபோது கணினியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது திடிரென கணினியை விட்டு செல்வோம். அப்போது நம்முடைய கணினியை நண்பர்களோ அல்லது வேறு யாரேனும் நம் கணினியில் உள்ள தகவல்களை பார்த்து விடுவார்களோ என்று நினைத்து நாம் பயம் கொள்வோம். ஏனெனில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை அவர்கள் பார்ப்பதால் சில பிரச்சினைகள் எழும். இதனால் நாம் நம்முடைய கணினியை அவசரமாக வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் அனைத்து வைக்க வேண்டும். இல்லையெனில் லாக் செய்ய வேண்டும். இதற்கு பதிலாக நம்முடைய கணினியின் டெஸ்க்டாப்பினை லாக் செய்யலாம். இதனால் நம்முடைய கணினியை வேறு எவராலும் அனுக முடியாது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி



        மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி பின் அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் ScreenBlur என்னும் சுருக்குவிசையை பயன்படுத்தி ஒப்பன் செய்யவும். பின் விரும்பிய கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Automation டேப்பினை தேர்வு செய்து நம் விருப்பபடி தேர்வுகளை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். அதேபோன்று Hotkeys டேப்பில் வேண்டிய சுருக்குவிசைகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். டெஸ்க்டாப்பினை லாக் செய்ய , டெஸ்க்டாப்பினை மறைக்க சுருக்கு விசைகளை உருவாக்கி கொள்ள முடியும்.
    ScreenBlur மென்பொருளை பயன்படுத்தி கணினியை லாக் செய்தவுடன், டெக்ஸ்க்டாப்பில் இதே போன்று தோன்றும். இந்த லாக்கினை விடுவிக்க வேண்டுமெனில் கடவுச்சொல்லை உள்ளிட்டால் மட்டுமே இந்த ScreenBlur லாக்கில் இருந்து வெளியேற முடியும். விண்டோஸ் கீ மற்றும் L கீகளை ஒருசேர அழுத்தி விண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்து கொள்ளவும் முடியும்.