ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசியை கணினிமூலம் Airdroid என்ற பயன்பாட்டின் வாயிலாக கட்டுபடுத்திடமுடியும்.
இன்று ஏராளமான பயன்பாடுகள் இந்த செயலிற்காக நமக்கு கம்பியில்லாத வழியில் உதவதயாராக உள்ளன ஆனால் அவைகள் நம்முடைய செல்லிடத்து பேசியில் அதிகஅளவு நினைவகத்திறனை அபகரித்து கொள்கின்றன அதனால் செல்லிடத்து பேசியின் செயல்ஆனது எருமைமாடு நடந்து செல்வதை போன்று மிகமெதுவாக ஆகிவிடுகின்றன அல்லது செயலிழந்த நிலைக்கு தள்ளபடுகின்றன ஆனால் இந்த Airdroid என்ற பயன்பாடு அவைகள் எதுவும் இல்லாமல் மிகச்சிறந்ததாக அமைகின்றது.
முதலில் இதனை நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் சாதனத்தில் நிறுவி செயல்படுத்திகொள்க உடன் திரையில் நம்முடைய யூஆர்எல் முகவரி, கடவுச்சொற்கள் போன்றவை படத்திலுள்ளவாறு தோன்றிடும்.
பிறகு நம்முடைய கணினியில் தேடுபொறியை செயல் படுத்தி அதில் நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் சாதனத்தின் யூஆர்எல் முகவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் நம்முடைய கடவுச்சொற்களை உள்ளீடு செய்யுமாறு கோரிநிற்கும் நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் சாதனத்தின் கடவுச்சொற்களை உள்ளீடு செய்து Login. என்ற என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் சாதனத்தை கணினிவாயிலாக கட்டுபடுத்திடமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக