வலையமைப்பு (Network) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலையமைப்பு (Network) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 11, 2013

இலவசமாக அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி செய்ய உதவும் லைன் (Line) பயன்பாடு

         நுண்ணறிபேசி(Smartphone) பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச குறுஞ்செய்தி அல்லது அழைப்பு செய்யும் பயன்பாடுகளை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான பயன்பாடுகள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள பயன்பாடு பற்றி இன்று பார்ப்போம்.

       Line என்ற இந்த பயன்பாடு மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக குறுஞ்செய்தி அனுப்பலாம். எந்தவிதமான வரையறையும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line பயன்பாடு உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.


     நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி பதிவு செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.

     இது எல்லா நுண்ணறிபேசிக்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.  உங்கள் நுண்ணறிபேசிஇல் இதை நிறுவும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் பதிவு செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு அலைகாலம்.

    இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி சமூக வலைத்தளம் போல இயங்கும்.

இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்: 
  • இலவசமாக அழைப்புகளை செய்யும் வசதி. 
  • மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சென்றடைகிறது.
  • Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
  • Group Chat வசதி
  • கணினிகளிலும் இயங்கும் வசதி
  • முழுக்க முழுக்க இலவசம்.

ஆன்ட்ராய்டு பயனர்கள்: 

        முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் முகவரி மூலம் உள்நுளைந்து இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து உள்நுளைந்து  பின்னர் Install என்பதை கிளிக் செய்யுங்கள். 

     இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ செயல்படுத்தி தரவிறக்கம் செய்யவேண்டும். உங்கள் நுண்ணறிபேசிஇல் நிறுவப்பட்ட பிறகு உங்கள் நுண்ணறிபேசி இலக்கத்தை கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.

Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:

  உங்கள் நுண்ணறிபேசிஇல்  App Market சென்று Line என்று தேடி தரவிறக்கம் செய்யுங்கள் பின்னர் உங்கள் நுண்ணறிபேசி இலக்கத்தை கொடுத்து பதிவு செய்யுங்கள்.


தரவிறக்க:

மொபைல்
 கணினி

தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். என்னை சேர்க்க Search By ID என்பதில் arunstarodc என்று தேடுங்கள்.

Android – க்கு QR Code:

Android பயனர்கள் கீழே உள்ள QR Code ஐ உங்கள் போனில் ஸ்கேன் செய்தும் தரவிறக்கம் செய்யலாம்.




சனி, நவம்பர் 30, 2013

இரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்

     

    பர்ன் நோட் என்னும் தளம் படித்தவுடன் செய்திகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கிறது.

     நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புவதாக கூறும் இந்த தளம் தான் சாத்தியமாக்கும் ரகசியம் மற்றும் நம்பகத்தன்மையை மிக மிக விரிவாகவே உறுதி செய்கிறது.

   முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் செய்தியை டைப் செய்தவுடன் அதற்குறிய இணைப்பு முகவரி ஒன்றை தருகிறது.இந்த முகவரியை யாருக்கு அனுப்பி வைக்கிறோமோ அவர்கள் மட்டும் தான் அதனை படிக்க முடியும்.அவர்களும் கூட குறிப்பிட்ட நேரம் வரை தான் படிக்க முடியும்.அதன் பிறகு அந்த செய்தி இணைய வெளியில் மறைந்து விடும்.

  செய்தியை எத்தனை நொடிகள் பார்க்கலாம் என்ப‌தையும் அதற்கு பாஸ்வேர்டு தேவையா என்பதை கூட அனுப்புகின்றவரோ தேர்வு செய்து கொள்ளலாம்.பாஸ்வேர்டு பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு மட்டும் தான்.ஆனால் செய்தி அனுப்ப உறுப்பினராக வேண்டும் என்ற நிபந்தனையில்லை.

    எந்த செய்தியும் ஒரே ஒரு முறை மட்டுமே படிக்க முடியும்.பர்ன் நோட்டும் தனது சர்வர்களில் எந்த செய்தியையும் சேமித்து வைப்பதில்லை என்று உறுதி அளிப்பதால் அந்த செய்தியின் ஆயுள் அவ்வளவு தான்.அதனை மீண்டும் உயிர்பிக்க செய்வது எந்த வகையிலும் எவருக்கும் சாத்தியமில்லை என்றும் சொல்லப்படுகிறது.உறுப்பினராக இருந்தால் செய்தி படிக்கப்பட்டு விட்டதா என்னும் பதிலை தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு.

  படித்தவுடன் கிழித்து எரிந்து விடவும் என்று சில கடித்தங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லவா அந்த வகையான செய்திகளுக்கு இந்த தளம் மிகவும் ஏற்றது.

    இரகசிய செய்திகளை யாரும் ந‌கலெடுக்கவோ அல்லது அந்த இணைய பக்கத்தையோ மொத்தமாக ஸ்கிரின்ஷாட் போல சேமிப்பதோ சாத்தியமில்லை என்றும் இந்த தளம் உறுதி அளிக்கிறது.இந்த செய்திக்கான பக்கத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்தாலும் அந்த பக்கம் காலியாக தான் இருக்குமாம்.
யாருக்கு அனுப்பபட்டதோ அவரால் செய்தி பார்க்கபடவில்லை என்றாலும் 72 மணி நேரத்தில் செய்தி தானாக மறைந்து விடுமாம்.

 நம்பகமான முறையில் தகவல்களை அனுப்ப இதனை பயன்படுத்தலாம்.ஆனால் சட்ட ரிதியிலான காரணங்களுக்காக செய்தியின் நகலை பாதுக்காக்க வேண்டிய தேவையிருந்தால் இந்த சேவையை பயன்படுத்துவது ஏற்றதல்ல.இது போன்ற விஷயங்களுக்கு எதற்கும் ஒரு முறை இந்த தளத்தின் பிரைவசி கொள்கையை படித்து விடுவது நல்லது.

இணையதள இணைப்பு : https://burnnote.com/ 
ஆன்ட்ராய்டு பயன்பாடு : https://play.google.com/store/apps/details?id=com.burnnote.BurnNote
ஐஃபோன்  பயன்பாடு       : https://itunes.apple.com/us/app/burn-note/id619517212




வியாழன், ஜூலை 11, 2013

குறிப்பிட்ட தளங்களை தடுக்க செய்ய உதவும் இலவச மென்பொருள்

       

      இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. சில தளங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம், அலுவலங்களில் சில தளங்களை தடுக்க வேண்டி வரலாம். அவ்வாறு தேவைப்படும் போது எளிதாக The Web Blocker என்ற மென்பொருள் கொண்டு எப்படி குறிப்பிட்ட தளங்களை Block செய்வது என்று பார்ப்போம். 
முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். 
இன்ஸ்டால் செய்து முடித்த Desktop – இல் உள்ள The Web Blocker மென்பொருளை ஓபன் செய்யுங்கள். இப்போது நீங்கள் இதில் இயங்க உங்களுக்கு Password கொடுக்க வேண்டும். 

        அடுத்து சில நொடிகளுக்கு பிறகு அந்த மென்பொருள் ஓபன் ஆகும். நீங்கள் முன்பு கொடுத்த Password கொடுத்து உள்ளே நுழையுங்கள். இப்போது மென்பொருள் கீழே உள்ளது போல இருக்கும். 

 

      இப்போது “Add Address to Block List” என்பதற்கு கீழ் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை கொடுக்கவும். பின்னர் இடது பக்கம் User List என்பதில் எந்த User – க்கு இது பொருந்தும் என்பதையும் நீங்கள் தெரிவு செய்து “Block Address” என்பதை கிளிக் செய்யுங்கள். பெரும்பாலும் All Users என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது Block List என்பதில் நீங்கள் கொடுத்த தளம் சேர்க்கப்பட்டு விடும்.  


இப்போது குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்தால் கீழ் உள்ளவாறு வரும்.


     இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம். Block செய்த பின் மென்பொருளின் Desktop Shortcut – ஐ நீங்கள் நீக்கி விடுவது நல்லது.

நன்றி: karpom



புதன், ஜூன் 26, 2013

Wifi ல் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க

      இப்பொழுதெல்லாம் கணினி இல்லாத வீடு கிடையாது.  அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது.   இவ்வாறு கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் எவராவது உங்கள் கணக்கில் நுழைந்து பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.
           உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.இந்த சிறிய மென்பொருள்  217 கேபி மட்டுமே.


    இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address),  எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர்  என்றும் தெரிந்து கொள்ள முடியும்.