புதன், செப்டம்பர் 25, 2013

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்கு மற்றும் கெஸ்ட் பயனர் கணக்கின் படத்தை மாற்ற

         விண்டோஸ் ஏழு இயங்குதளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக விண்டோஸ் எட்டு இயங்குதளம் உள்ளது. விண்டோஸ் ஏழு இயங்குதளத்தில் கெஸ்ட் மற்றும் பயனர் கணக்கின் படத்தை மாற்ற வேண்டுமெனில் எளிதாக கன்ட்ரோல் பேனல் சென்று மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை, இதில் பயனர் கணக்கின் படத்தை மாற்ற ஒரு சில வேலைகள் செய்ய வேண்டும். 

             விண்டோஸ் 8 இயங்குதளத்தில் புதிய பயனர் கணக்கினை உருவாக்கும் போது தானாகவே புதிய படத்தினை இயங்குதளம் அமைத்துக்கொள்ளும். அவ்வாறு அமைக்கும் படங்களுக்கு பதில் நமக்கு பிடித்த படங்களை மாற்றிக்கொள்ளலாம். விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்கு மற்றும் கெஸ்ட் பயனர் கணக்கின் படத்தை மாற்ற முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து C: ஒப்பன் செய்யவும். 


        பின் View என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் Hidden items என்னும் செக்பாக்சை டிக் செய்யவும். அடுத்து கீழ் காணும் வரிசையில் ஒப்பன் செய்யவும். C:\ ProgramData -> Microsoft -> Default Account Pictures

 

பின் படங்களை இந்த கோப்பறையில் காப்பி செய்யவும். படங்கள் கீழ்காணும் அளவு, பெயர், பார்மெட்களில் இருத்தல் வேண்டும்.

பயனர் கணக்கு
  • அளவு 200*200, பார்மெட் .PNG, பெயர் user-200.
  • அளவு 40*40, பார்மெட் .PNG, பெயர் user-40.
  • அளவு 448*448, பார்மெட் .PNG, பெயர் user.
  • அளவு 448*448, பார்மெட் .BMP, பெயர் user.


கெஸ்ட் கணக்கு
  • அளவு 448*448, பார்மெட் .PNG, பெயர் guest.
  • அளவு 448*448, பார்மெட் .BMP, பெயர் guest. 

         மேலே குறிப்பிட்டுள்ளவாறு படங்களை ஒழுங்குபடுத்தி கொள்ளவும். பின்  அதனை Default Account Pictures என்னும் கோப்பறைக்குள் இந்த படங்களை பேஸ்ட் செய்யவும்.


        பின் தோன்றும் விண்டோவில் Continue பொத்தானை அழுத்தி படங்களை முழுயாக காப்பி செய்யவும். பின் கன்ட்ரோல் பேனல் சென்று , User Accounts தேர்வு செய்து பின் Guest பயனர் கணக்கின் படத்தை காணவும். தற்போது Guest பயனர் கணக்கின் படம் மாற்றப்பட்டிருக்கும்.


அடுத்து புதிய பயனர் கணக்குகளை ஒப்பன் செய்யவும். அப்போதும் பயனர் கணக்கின் படமும் மாற்றப்பட்டு வரும்.


அவ்வளவுதான், வேலை முடிந்தது. இதே முறையை பின்பற்றி வேண்டிய படங்களை அமைத்துக்கொள்ள  முடியும்.



நன்றி : tamilcomputerinfo

கணினியில் உள்ள குறுந்தகடு இயக்கியில் இருந்து குறுந்தகடு வெளிவரவில்லையா?

               ஒரு ஆர்வத்தில் குறுந்தகடயை உங்கள் கணினியில் உள்ள குறுந்தகடு இயக்கியில்(DVD Drive) போட்டு அதை இயக்கியிருப்பீர்கள். இயக்கம் முடிந்த பிறகு மீண்டும் அதை வெளியே எடுக்க முனையும்பொழுதுதான் உங்களுக்கு சிக்கலே ஆரம்பிக்கும்.. நன்றாக திறந்து மூடிக்கொண்டிருந்த டிரைவ் இப்பொழுது திறக்காமல் உங்கள் பொறுமையைச் சோதிக்கும்.


குறுந்தகடு இயக்கியின் கதவு(DVD Drive Tray) திறக்காமல் இருப்பதற்கான காரணங்கள்:
       வழக்கம்போல முழுமுதல் காரணம் தூசிகள்தான். அதனோடு வேறேதேனும் ஒட்டும்பொருட்கள், தலைமுடி, அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கும். அல்லது DVD Drive Tray கதவுப் பகுதி பிளாஸ்டிக்கால் ஆனதால் அதில் ஏதேனும் விரிசல், உடைசல் ஏற்பட்டாலும் இவ்வாறு திறக்காமல் இருக்கலாம்.

இப்பிரச்னைக்கு எளிய தீர்வுகள் இருக்கின்றன.

தீர்வு 1: 
        உங்கள் CD Drive -மூடியின் கீழாக அருகில் பார்த்தால் ஒரு ஊசி நுழையும் அளவிற்கு ஒரு ஓட்டை இருக்கும். நன்றாக உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ஒரு சிலர் இதை கவனித்திருக்கமாட்டார்கள். (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பகுதி) அந்த துளையில் ஒரு ஊசியை அல்லது பேப்பர் கிளிப் (paper clip) எடுத்து இலேசாக நுழைத்தால் போதும். உடனடியாக உங்களுடைய சி.டி டிரைவின் டிரே வெளியே வந்துவிடும்.

தீர்வு 2:
    உங்கள் கணினியில் மைகம்ப்யூட்டர் ஐகான் மீது கிளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் அனைத்து டிரைவ்களும் காட்டப்படும். அதில் Devices with removable storage என்ற பிரிவின் கீழ் உங்கள் சி.டி. அடங்கிய ஐகான் (DVD Drive Icon) காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து எஜக்ட் (Eject) என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்களுடைய கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது?

                  உங்களுக்கு தெரியுமா, உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது எப்போது என்று, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பிறந்தநாள் எப்போது என்று கேட்டால் சொல்லிவிடுவார்கள் ஆனால் அவர்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அவர்களால் சொல்ல முடியாது, ஏனென்றால் இதனை யாரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை ஏதோ ஒரு காரணத்திற்காக கூகுள் கணக்கினை உருவாக்கியிருப்போம். பின் அதே கணக்கினை அனைத்து கூகுள் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெற பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் கூகுள் கணக்கானது எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அது நமக்கு தெரியாது. சரி கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது என்று கண்டறிய வழி இருக்கிறதா என்றால், இருக்கிறது என்றே கூறலாம். சரி ஏன் இந்த கூகுள் கணக்கு உருவாக்கப்பட்ட நாள் நமக்கு தெரிய வேண்டும், நம்முடைய கடவுச்சொல் மறக்கும்போது அதனை மீண்டும் பெற கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டதேதி மிகவும் அவசியம் ஆகும்.



           இதனை கண்டறிய முதலில் Google Takeaway பக்கத்திற்கு செல்லவும். இதற்கான சுட்டி. பின் Transfer your Google+ connections to another account என்னும் சுட்டியை கிளிக் செய்யவும்.



           பின் உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்ற விவரம் காண்பிக்கப்படும்.

சனி, செப்டம்பர் 21, 2013

கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட ஒரு அடைவு உருவாக்க



               இந்த பதிவில் கணனியில் உள்ள உங்கள் கோப்புறைக்கு மேலதிக மென்பொருட்களின் உதவி இன்றி கடவுச்சொல் இட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று சொல்கிறேன்.

படி 1 : புதிய கோப்புறை (Folder) ஒன்றினை உருவாக்குங்கள்  (Right-click -->> New                 Folder) அதற்கு விரும்பிய பெயரிடுங்கள்.
படி 2 : பாதுகாப்பாக வைக்க வேண்டிய கோப்புகளை அந்த கோப்புறைஇல்                      இடுங்கள்.
படி 3 : நீங்கள் உருவாக்கிய கோப்புறைஇல் Right Click செய்து  Send To -->>                              Compressed (zipped) Folder இனை தெரிவு செய்யுங்கள்.
படி 4 :  இப்போது அதே இடத்தில் Compressed (zipped) Folder உருவாகி இருக்கும். 
படி 5 : Zipped Folder இனை Open செய்யுங்கள் அதனுள் நீங்கள் உருவாக்கிய                          கோப்புறை இருக்கும்.
படி 5 : File Menu இல் Add a Password இனை தெரிவு செய்து உங்களுக்கு                                       தேவையான Password இனை இடுங்கள்.

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையதளம்



        மாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற  சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சில நொடிப்பொழுதுகளில் மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம் . மாணவர்களுக்கு இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் அது மிகையாகது இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் வினாக்களை type செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு செய்து பின்னர் answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்.

        உங்களுக்கு மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும் வசதியும் உண்டு .  கணித பாடத்தின் முழு பாட அலகினையும் கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும் . அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும் . ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும் .

நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி  www.mathway.com

தமிழ்நாடு அரசு ரத்த வங்கி (Tamilnadu Government Blood Bank)




அரசு ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் வலைதளம்: www.tngovbloodbank.in

இந்த வலைதளம் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தங்கள் கொடை விருப்பத்தை (இ-ரிஜிஸ்ட்ரி) பதிவு செய்வதற்கு வழிவகை செய்துள்ளது. மேலும், இவ்வலைதளத்தில் உள்ள தன்னார்வ ரத்த கொடையாளர் விவரங்கள்அரசு ரத்த வங்கிகளின் அவசரகால ரத்த தேவையை பூர்த்தி செய்வதற்கு தவியாக உள்ளது.இந்த வலைதளம் அரசு ரத்த வங்கிகளின் ரத்த இருப்பு, ரத்த தான முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய விவரம், ரத்த தான முகாம் அமைப்பாளர்களின் தொலைபேசி எண் போன்றவைகளை அனைவரும் அறியும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.


http://bit.ly/S3Px2b

திரை அசைவுகளைப் படம் பிடிக்கும் மென்பொருள் (CamStudio)

      

       கணினித் திரையில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அதனை ஒரு வீடியோ பைலாக உருவாக்கிக் தரக் கூடிய ஒரு மென்பொருளே கேம்ஸ்டுடியோ. இது ஒரு இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள். திரை நடவடிக்கைகளை மாத்திரமன்றி கூடவே அதனுடன் ஒலியையும் பதிவு செய்து தருகிறது கேம்ஸ்டுடியோ. . கேம்ஸ்டுடியோவில் என்னென்ன வசதிகள் உள்ளன? AVI வீடியோ பைலை ப்ளேஸ் ப்ளேயரில் இயங்கத்தக்க SWF பைலாக மாற்றிக் கொள்ளலாம். உருவாக்கும் வீடியோ படங்களுக்கு ஒலிவாங்கி அல்லது ஒலிபெருக்கி மூலம் ஒலியை இணைக்கலாம்.வீடியோ படங்களுக்குத் தலைப்பிடலாம். குறிப்புகளை வழங்கலாம். உருவாக்கும் வீடியோ பைலை திகதி மற்றும் நேரத்தை பைல் பெயராகக் கொண்டு தானாக்வே சேமித்துக் கொள்ளலாம். வீடியோ பைலின் தரத்தைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யலாம். வீசீடி அல்லது டீவிடியால் பதிவு செய்வதற்கான உயர் தரத்திலான வீடியோவையும் இமெயிலில் அனுப்பக் கூடிய வாறான சிறிய பைல் அளவு கொணடதாகவும் பதிவு செய்து கொள்ளலாம். திரை முழுவதையும் அல்லது திரையில் விரும்பிய ஒரு பகுதியை மாத்திரம் பதிவு செய்து கொள்ளலாம். கேம் ஸ்டுடியோ 2.5 எனும் பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1.3 மெகாபைட் அளவு கொண்ட ஒரு சின்னஞ் சிறிய மென்பொருளான கேம்ஸ்டுடியோவை விண்டோஸின் எந்தப் பதிப்புடனும் நிறுவிக் கொள்ள முடியும். கேம்ஸ்டுடியோவை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? எந்தவொரு பயன்பாட்டு மென்பொருளுக்கான டிமோ வீடியா காட்சிகள் மற்றும் வீடியோ டியுடோரியல் உருவாக்க முடியும். பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். கணினியில் தோன்றும் பிரச்சினகளை வீடியோவாகப் பதிவு செய்து தொழில் நுட்ப வல்லுணர்களிடம் காண்பித்து அதற்கான தீர்வைப் பெறலாம். 

            கணினியில் அவ்வப்போது தெரிந்து கொள்ளும் புதிய விடயங்களை வீடியோவாகப் பதிவு செய்து வைக்கலாம். மிகவும் எளிமையான இடை முகப்பைக் கொண்ட கேம்ஸ்டுடியோவை இயக்கும் விதத்தை ஓரிரு நிமிடத்திலேயே கற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. எங்காவது மாட்டிக் கொள்ளும் பட்சத்தில். உதவ, உதவிக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. கேம்ஸ்டுடியோ மென்பொருளை  http://www.camstudio.org எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படிப்புக்களும்அதன் தமிழ்ப்பெயர்களும்


1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்

2. Archaeology - தொல்பொருளியல்

3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)

4. Astrology - வான்குறியியல்

5. Bacteriology பற்றுயிரியல்

6. Biology - உயிரியல்

7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்

6. Climatology - காலநிலையியல்

7. Cosmology - பிரபஞ்சவியல்

8. Criminology - குற்றவியல்

9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்

10. Dendrology - மரவியல்

11. Desmology - என்பிழையவியல்

12. Dermatology - தோலியல்

13. Ecology - உயிர்ச்சூழலியல்

14. Embryology - முளையவியல்

15. Entomology - பூச்சியியல்

16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்

17. Eschatology - இறுதியியல்

18. Ethnology - இனவியல்

19. Ethology - விலங்கு நடத்தையியல்

20. Etiology/ aetiology - நோயேதியல்

21. Etymology - சொற்பிறப்பியல்

22. Futurology - எதிர்காலவியல்

23. Geochronology - புவிக்காலவியல்

24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்

25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்

26. Geomorphology - புவிப்புறவுருவியல்

27. Graphology - கையெழுத்தியல்

28. Genealogy - குடிமரபியல்

29. Gynaecology - பெண்ணோயியல்

30. Haematology - குருதியியல்

31. Herpetology - ஊர்வனவியல்

32. Hippology - பரியியல்

33. Histrology - இழையவியல்

34. Hydrology - நீரியல்

35. Ichthyology - மீனியியல்

36. Ideology - கருத்தியல்

37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்

38. Lexicology - சொல்லியல்

39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்

40. Lithology - பாறையுருவியல்

41. Mammology - பாலூட்டியல்

42. Meteorology - வளிமண்டலவியல்

43. Metrology - அளவியல்

44. Microbiology - நுண்ணுயிரியல்

45. Minerology - கனிமவியல்

46. Morphology - உருவியல்

47. Mycology - காளாம்பியியல்

48. Mineralogy - தாதியியல்

49. Myrmecology - எறும்பியல்

50. Mythology - தொன்மவியல்

51. Nephrology - முகிலியல்

52. Neurology - நரம்பியல்

53. Odontology - பல்லியல்

54. Ontology - உளமையியல்

55. Ophthalmology - விழியியல்

56. Ornithology - பறவையியல்

57. Osteology - என்பியல்

58. Otology - செவியியல்

59. Pathology - நொயியல்

60. Pedology - மண்ணியல்

61. Petrology - பாறையியல்

62. Pharmacology - மருந்தியக்கவியல்

63. Penology - தண்டனைவியல்

64. Personality Psychology - ஆளுமை உளவியல்

65. Philology - மொழிவரலாற்றியல்

66. Phonology - ஒலியியல்

67. Psychology - உளவியல்

68. Physiology - உடற்றொழியியல்

69. Radiology - கதிரியல்

70. Seismology - பூகம்பவியல்

71. Semiology - குறியீட்டியல்

72. Sociology - சமூகவியல்

73. Speleology - குகையியல்

74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)

75. Technology - தொழில்நுட்பவியல்

76. Thanatology - இறப்பியல்

77. Theology - இறையியல்

78. Toxicology - நஞ்சியல்

79. Virology - நச்சுநுண்மவியல்

80. Volcanology - எரிமலையியல்

81. Zoology - விலங்கியல்

திங்கள், செப்டம்பர் 02, 2013

திறந்த அலுவலகம் (Open Office) மென்பொருள் தொகுப்பு தரவிறக்கம்

                                                            

                      Microsoft office கூட்டுத் தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து applicationகளும் அடங்கியதாக இயங்குவது open office ஆகும். ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன்டேஷன் மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த application தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே. ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி 
http://download.openoffice.org/other.html

DEVICE DRIVER களை பேக்கப் எடுத்து கொள்ள ஒரு மென்பொருள்

           

             Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும் இது போன்று தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.

நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது ஹார்டுவேர் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.

இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.

அந்த மென்பொருளின் பெயர் Double Driver . இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.
அதில் "Scan" பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியில் உள்ள ஹர்டுவேர்களுக்கான அனைத்து Device Driver களும் தோன்றும்.


Backup கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமித்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைத்துள்ளவற்றை தேவைப்படும் போது Restore செய்ய விரும்பினால் Backup ல் dd.exe என்ற ஃபைல் இருக்கும்.

அதனை ஓபன் செய்து Restore அழுத்தவும். அதில் தோன்றும் Device Driver களில் தேவையானவற்றை நிறுவி கொள்ளவும்.