புதன், டிசம்பர் 11, 2013

இலவசமாக அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி செய்ய உதவும் லைன் (Line) பயன்பாடு

         நுண்ணறிபேசி(Smartphone) பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச குறுஞ்செய்தி அல்லது அழைப்பு செய்யும் பயன்பாடுகளை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான பயன்பாடுகள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள பயன்பாடு பற்றி இன்று பார்ப்போம்.

       Line என்ற இந்த பயன்பாடு மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக குறுஞ்செய்தி அனுப்பலாம். எந்தவிதமான வரையறையும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line பயன்பாடு உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.


     நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி பதிவு செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.

     இது எல்லா நுண்ணறிபேசிக்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.  உங்கள் நுண்ணறிபேசிஇல் இதை நிறுவும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் பதிவு செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு அலைகாலம்.

    இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி சமூக வலைத்தளம் போல இயங்கும்.

இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்: 
  • இலவசமாக அழைப்புகளை செய்யும் வசதி. 
  • மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சென்றடைகிறது.
  • Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
  • Group Chat வசதி
  • கணினிகளிலும் இயங்கும் வசதி
  • முழுக்க முழுக்க இலவசம்.

ஆன்ட்ராய்டு பயனர்கள்: 

        முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் முகவரி மூலம் உள்நுளைந்து இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து உள்நுளைந்து  பின்னர் Install என்பதை கிளிக் செய்யுங்கள். 

     இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ செயல்படுத்தி தரவிறக்கம் செய்யவேண்டும். உங்கள் நுண்ணறிபேசிஇல் நிறுவப்பட்ட பிறகு உங்கள் நுண்ணறிபேசி இலக்கத்தை கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.

Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:

  உங்கள் நுண்ணறிபேசிஇல்  App Market சென்று Line என்று தேடி தரவிறக்கம் செய்யுங்கள் பின்னர் உங்கள் நுண்ணறிபேசி இலக்கத்தை கொடுத்து பதிவு செய்யுங்கள்.


தரவிறக்க:

மொபைல்
 கணினி

தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். என்னை சேர்க்க Search By ID என்பதில் arunstarodc என்று தேடுங்கள்.

Android – க்கு QR Code:

Android பயனர்கள் கீழே உள்ள QR Code ஐ உங்கள் போனில் ஸ்கேன் செய்தும் தரவிறக்கம் செய்யலாம்.




சனி, டிசம்பர் 07, 2013

கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி?


         இன்றைக்கு நிறைய பேருக்கு வழிகாட்டி என்றால் அது கூகுள் மேப் என்று சொல்லலாம். கணினி, அலைபேசி என்று இரண்டிலும் உள்ள இதன் மூலம் தெரியாத ஊர்களில் அங்கே, இங்கே அலைந்து அவஸ்தைபடாமல் எளிதாக நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம். நகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் கொண்டுள்ள இதில், பெரும்பாலான கிராமங்களை குறித்த தகவல்கள் இல்லை. அப்படி இல்லாத இடங்களை, ஊர்களை எப்படி கூகுள் மேப்பில் சேர்ப்பது என்று பார்ப்போம். 

  1.  முதலில் Google Map Maker என்ற தளத்துக்கு செல்லவும். உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Log-in ஆகி கொள்ளவும். 
  2.  இப்போது எந்த ஊரை அல்லது இடத்தை சேர்க்க வேண்டுமோ அந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரை கூகுள் மேப்பில் தேடவும். [அது கூகுள் மேப்பில் இருக்க வேண்டும்.]
  3.  இப்போது உங்கள் ஊரில் உள்ள ஒரு இடம் அல்லது ஊர் எங்கே இருக்கும் என்பது மேப்பை பார்க்கும் போது உங்களுக்கு தெரியவரும். தெரியவில்லை என்றால் Zoom செய்து பார்க்கவும். [Satellite View - இல் தான் பார்க்க வேண்டும்]
  4. குறிப்பிட்ட இடம் என்று நீங்கள் உறுதி செய்த பின் Map க்கு மேலே உள்ள Add New>> Add a Place என்பதை கிளிக் செய்யுங்கள். 
  5. இப்போது கீழே படத்தில் உள்ளது போல சிவப்பு நிற குறியீட்டை குறிப்பிட்ட இடத்தில் வைத்து Left Click செய்யவும். 
  6. இப்போது அது என்ன இடம் என்று நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும். 
  7. இப்போது மேப்க்கு இடது பக்கம் அது குறித்த மற்ற தகவல்களை கொடுக்கலாம். தளம், தொலைபேசி எண், வேலை நேரம், மற்றவை.
  8. இப்போது Save Button கொடுத்து Save செய்து விடுங்கள்.
  9.  இடது பக்கத்தில் நீங்கள் Add செய்த Place Bending – இல் இருக்கும். சில நாட்களில் அது உறுதி செய்யப்பட்ட பின் அங்கே சேர்க்கப்பட்டு விடும். 
  10. இதே போல ஆறு, ஏரி, குளம், பார்க், கட்டிடங்கள் போன்றவற்றை குறிப்பிடும் போது ஒரு லைன் அல்லது கட்டம் போன்று குறிக்க வேண்டும். அவற்றை மேப்பில் சேர்க்க Step 4 இல் Draw a Line, Draw a Shape என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள். 
  11. இப்போது ஒரு Plus Symbol மேப்பில் இருக்கும். அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்து ஒரு கிளிக் செய்தால் ஒரு Pointer உருவாகும், அடுத்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து கிளிக் செய்தால் இன்னொரு pointer உருவாகும்.  அங்கேயே முடிக்க Double Click செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையில் இப்போது ஒரு லைன் உருவாகி இருக்கும். அவற்றை பற்றிய தகவல்களை கொடுத்து Save செய்து விடுங்கள். 
  12. இதே போலவே  தான் Draw a Shape -க்கும் செய்ய வேண்டும்.
நன்றி:  teachtoit blog

புதன், டிசம்பர் 04, 2013

இணையதளத்தை கண்டுபிடித்தது யார்?


  இணையதளத்தை கண்டுபிடித்தது யார்? என்று உங்களுக்குத்தெரியுமா? 

இதற்கான பதில் டிம் பெர்னஸ் லீ (Tim Berners Lee) என்பது தான். 

    டிம் பெர்னஸ் லீ தான் வைய விரிவு வலையை கண்டுபிடித்தவர். இணையத்தில் ஒரு அங்கமான வைய விரிவு வலை 1993 ல் உதயமான போது தான் உலகின் முதல் இணையதளம் உருவானது. சரியாக சொல்வதானால் வலைமனை.

   1969 ல் அர்பாநெட்டாக உருவான இணையத்தின் ஒரு அங்கமாக எல்லோரும் பார்க்ககூடிய வகையில் வைய விரிவு வலையை செர்ன் ஆய்வு கூடத்தில் டிம் பெர்னஸ் லீ உருவாக்கினார். இதற்கான பூர்வாங்க பிரவுசர் மற்றும் இணைய பக்கங்களில் இணைப்புகளை தோன்றச்செய்வதற்கான ஹைபர்டெக்ஸ்ட் வசதி எல்லாம் அறிமுகமான போது இணையதளங்களும்  பிறந்தன.

      இந்த திட்டத்திற்காக அமைகப்பட்ட வலை மனையே உலகின் முதல் இணையதளமாக கருதப்படுகிறது .அதன் முகவரி http://info.cern.ch/ உலகின் முதல் சர்வரும் இது தான்.

       வலையை உருவாக்கி இணைய புரட்சிக்கும் வித்திட்ட டிம் பெர்னரஸ் லீ பற்றி அறிய  http://home.web.cern.ch/about/birth-web