வெள்ளி, பிப்ரவரி 14, 2014

சற்றே விலகி நில்லேன் சுட்டி !



சுட்டி (கர்சர்) படுத்தும் பாடு என்று புலம்பிய அனுபவம் உங்களுக்கு உண்டா?. சுட்டி (கர்சர்) என்ரால் மவுஸ் கர்சர்.

இணையத்தில் அதிகம் டைப் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி இப்படி புலம்ப நேரலாம். அதாவது டைப் செய்யும் போதெல்லாம் எந்த இடத்தில் டைப் செய்கிறோமோ சரியாக அந்த இடத்தில் மவுசின் கர்சர் கோடு போலவே கைகாட்டி கொண்டிருக்கும்.

சுட்டிக்காட்டுவது தான் இதன் நோக்கம் என்றாலும் டைப் செய்யும் போது மட்டும் இது இடையூறாக தோன்றலாம்.டைப் செய்த எழுத்து சரியானது தானா இல்லையா என்ற சந்தேகத்தை இது உண்டாக்கலாம்.சில நேரங்களில் பார்த்தால் தவறான எழுத்து போல தோன்றும் ஆனால் கர்சரை நகர்த்தி விட்டு கவனித்தால் எந்த பிழையும் இருக்காது.

இது தேவையில்லாத‌ இடையூறு மட்டும் அல்ல கவனச்சிதறலும் கூட!.அதிலும் தீவிர கவனம் கொண்டவர்களுக்கு இது மிகுந்த எரிச்சலை தரும்.

இது போன்ற நேரங்களில் தான் கர்சர் புலம்ப வைப்பதோடு சற்றே விலகியிறேன் பிள்ளாய் என்று நவீன நந்தனாராக கெஞ்ச வைக்கும். இதற்கு அழகான தீர்வாக‌ கர்சரை அப்படியே  ஓரங்கட்டி செல்லும் சேவை ஒன்று இருக்கிறது.

பார்க் கர்சர் அசைடு என்னும் அந்த சேவை மூலமாக டைப் செய்யும் போது கர்சர் இடையூறாக இல்லாத அளவுக்கு அதனை இணைய பக்கத்தின் ஏதாவது ஒரு மூளைக்கு நகர்த்தி சென்று விட இந்த சேவை உதவுகிறது.

இந்த சேவை மூலம் கரசரை நகர்த்த முடிவதோடு அது எந்த இடத்தில் நிற்க வேண்டும் என தீர்மானிக்கும் வசதியும் இருக்கிறது.(ஐந்து விதமான இடங்களில் நிறுத்தலாம்).அதோடு மீண்டும் கரசரை பழைய நிலைக்கு கொண்டு வர எத்தனை விசைகள் தேவை என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்.

சுட்டி (கர்சர்) எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கலாம்.எதையும் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்யும் அவசிய‌ம் இல்லாமலே இதனை பயன்படுத்தலாம்.

சின்ன சேவை தான். ஆனால் இணையத்தின் பயன்பாட்டை மேலும் மெருகேற்றும் சின்னஞ்சிறிய சேவை.

இந்த சேவைய உருவாக்கியிருப்பது கொல்கத்தாகாராரான அனில் குப்தா என்பவர்.


இணையதள முகவரி: https://sites.google.com/site/aghappy/

கருத்துகள் இல்லை: