இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருப்பின் பதிவிறக்கம் துண்டிக்கப்படும். மீண்டும் பதிவிறக்கத்தை தொடரும் போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து பதிவிறக்கம் தொடரும். இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமெனில் பதிவிறக்க மென்பொருள் உதவியுடன் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும். இலவசமாக இணையத்தில் பதிவிறக்க மென்பொருள்கள் கிடைக்கிறன. அவை
1.GETGO
இந்த GETGO மென்பொருள் உதவியுடன் நேரிடையாக யுடுப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்புநரி மற்றும் கூகுள் குரோம் உலாவியின் மூலமாக பதிவிறக்கம் செய்யும் போது நேரிடையாக GETGO மென்பொருள் உதவியுடன் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். GETGO மென்பொருள் உதவியுடன் அதிவேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி
2.Free Download Manager (FDM)
இது ஒரு திறந்த மூல மென்பொருள் ஆகும். மேலும் ப்ளாஷ் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவும், இந்த மென்பொருளில் வசதி உள்ளது. இதனை போர்ட்டபிள் மென்பொருளாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி
3.Internet Download Accelerator (IDA)
இந்த மென்பொருள் இலவச பதிப்பாகும். மேலும் உலாவிகளில் இருந்து நேரடி பதிவிறக்கம் செய்யவும். யூடுப் தளத்திலிருந்து காணொளிகளை நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக