வியாழன், ஜூன் 06, 2013

கம்பில்லா தொடர்ப்பு வசதி-ஒரு பார்வை ( WIRELESS in a glance)

இன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியமாக ஆகிவிட்டது  .இதில் WIRELESS சின் பங்கு அதிகரித்து வருகிறது.WIRELESS   எங்கெல்லாம்  இதன்னுடய பங்கு   உள்ளது என்று பார்ப்போம்.
அவை,
  1. WIRELESS BROADCASTING
  2. CELLULAR BROADCASTING
  3. BLUETOOTH TECHNOLOGY
  4. WIFI
  5. SHORT RANGE POINT TO POINT COMMUNICATION.
நாம் WIRELESS BROADCASTING பற்றி பார்ப்போம்.இந்த BROADCASTING இல்,
  1. TELEVISION BROADCASTING
  2. RADIO BROADCASTING
  3. AMATEUR (HAM)RADIO
  4. OTHER DEDICATED RADIO BROADCASTING NETWORK
செல்லுலார் தொலைபேசி (CELLULAR TELEPHONY ):
நாம் அடுத்தப்படியாக CELLULAR TELEPHONY பற்றி காணலாம் .
MOBILE TECHNOLOGY யில் 
  •  பூஜியம் தலைமுறை (0G)-1970
  •  முதல் தலைமுறை (1G)-1980
  •  இரண்டாம் தலைமுறை (2G)-FINLAND இல் 1991 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டது.
  • 2G தலைமுறையில் இருந்து 2.5G பின் 3G தலைமுறைக்கு வந்துள்ளோம்.
  •  SMS – 1991 இல் FINLAND இல் கண்டுபிடிக்கப்பட்டது.
 CELLULAR TELEPHONY யில் GSM,CDMA ,GPRS ,UMTS போன்ற தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்ப்பம் மூலம் தான் SIM CARD மாறுப்படுகிறது. அவற்றை பார்ப்போம்.
(SIM – SUBSCRIBER IDENTIFICATION MODULE)

GSM:

AIRTEL ,VODEFONE ,IDEA ,RELIANCE  AND AIRCEL போன்ற நிறுவனங்களில்  GSM என்ற TECHNOLOGY யை பயன்படுத்துகிறது.GSM தொழில்நுட்பம்  1987 இல் கண்டுப்பிடிக்கப்பட்டது.மேல குறிப்பிட நிறுவனகளின்  SIM CARD டை  எந்த PHONE வேண்டுமானாலும் நாம்  பயன்படுத்தலாம். GSM சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படிக்கிறது. 

CDMA:

CDMA(CODE DIVISION MULTIPLE ACCESS) தொழில்நுட்பம் 1987 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.இந்த தொழில்நுட்பதைRELIANCE, TATA TELE SEVIRCE. போன்ற நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.இது GSM தொழில்நுட்பதை காட்டிலும் தன்மை குறைந்தவை.

UMTS:

UMTS என்ற தொழில்நுட்பதை BSNL MOBLIES நிறுவனம் பயன்படுதப்படுகிறது.இது CDMA மற்றும் GSM என்ற இரண்டு தொழில்நுட்பத்தை இணைந்த ஒரு கலவையாகும். 4G MOBILE , 3G MOBILE தொழில்நுட்பகள் இந்த வகையை சார்ந்தவையாகும்.SATELLITE PHONE களில்  இது பயன்படுகிறது.

BLUETOOTH தொழில்நுட்பம்:

ERICSSON என்ற நிறுவனம் BLUTOOTH தொழில்நுட்பதை கண்டுபிடித்தது. 1994 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பு வெளிவந்தது.
  1. BLUETOOTH 1.1 - 2002
  2. BLUETOOTH 2.0 – NOVEMBER 10 ,2004
  3. BLUETOOTH 2.1 – JULY 26 ,2007.
  4. BLUETOOTH 3.0 – APRIL 21 2009 (HIGH SPEED TRANSMISSION )
  5. BLUETOOTH 3.0 தொழில்நுட்பம் பழைய பதிப்பை விட 10 மீட்டர் அதிகரித்து உள்ளனர். இதில் பொதுவாக 2.4 GHZ BAND பயன்பட்டுத்தப்படுகிறது. 
 BLUETOOTH நன்மைகள்:
 நம் வீடுகளில் LIGHT ,FANS A/C போன்ற மின் சாதனகளை பொருட்களை BULETOOTH மூலம் இயக்கலாம்.அதாவது WIRE இல்லாமல் இயக்கலாம் .வாகனங்களில் இதை பயன்படுத்தி வருகின்றார்கள். 

WI -FI :


WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்

NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன.

WI –FI யின் தந்தையன அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார். 
இவர் IEEE 802.11b மற்றும் 802.11a என்பதர்க்கு கிழ் இதை ஆரம்பித்தார்.
WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK) என்பதர்க்கு உரியதாகும்.

WI –MAX:

WI –MAX என்ற தொழில்நுட்பம் வந்துள்ளது.இது WIFI விட அதிக அளவில் தொடர்புகொள்ளும்.

இது APARTRMENT ,WORKING COMPLEX, EDUCATIONAL,INDUSTRIES.
WIFI ,WIMAX  உள்ளப்பகுதில் SECURITY CAMERA ,MICROWAVE OVENS போன்றவற்றை பயன்படுத்தலாம்.
புதிய பதிப்பு மடிக்கணினியில் இருப்பியில்ப்பாக(INBUILT)WIFI தொழில்நுட்பம் இருக்கும்.மேசைக்கணினி WIFI தொழில்நுட்பம் INBUILT டக இருக்காது.அதனால் USB WIFI USB STICK என்ற வன்பொருள் பயன்படுத்தி தொடப்புக்கொள்ளலாம் .

SHORT RANGE POINT TO POINT COMMUNICATION :
இதில்,
  • REMOTE CONTROL
  • INFRARED(IrDA)
  • RFID
  • WIRELESS SENSOR NETWORK
  • MISCELLANEOUS SHORT RANGE COMMUNICATION.
REMOTE CONTROL:
 இது TV,AC, CD &DVD PLAYER போன்றவற்றை பயன்படுகிறது.இது 1903, LEONARDS TORRES QUEUEDO என்பவர் கண்டுபிடித்தார்.

IrDA:
IrDA விரிவாக்கம் INFRARED DATA ASSOCIATION ஆகும்.மிகவும் குறுகியத் தொலைவில் தொடர்ப்புக்கொள்ளும்.பலவகை IrDA உள்ளன.அவை ,IrDHY,IrLMP,IrCOMM ,TINYTP ,IROBEX IrLAN மற்றும்  IrSIMPLE.

RFID :
 RFID –இது 1946 ஆம் ஆண்டு LEON THEREMIN கண்டுபிடித்தார்.
இது பெரிய நிறுவனங்களில் RFID அடையாளக் கருவியாக பயன்படுகிறது.அதாவது மனிதனை அல்லது விலங்குகளை இந்த கருவி அடையாளப்படுத்திக் காட்டும்.


நாம் பயன்பாட்டிற்கு (இறப்புக்கு) பின் கூகுள் கணக்கினை அழிக்க மற்றும் தகவல்களை மாற்ற - Inactive Account Manager

                       இணையப்பயன்பாட்டில் அனைத்து இணைய பயனாளர்களும் ஏதோ ஒரு வகையில் கூகுளில் வசதியை பெற்று வருகிறனர். குறிப்பாக ப்ளாக், யூடுப், ஜிமெயில் , கூகுள் ப்ளஸ் மற்றும் பல்வேறு வசதிகளை பெறுகிறனர். பெரும்பாலும் இந்த வசதிகளை அனுக கூகுள் கணக்கு தேவைப்படும்.

                       இவ்வாறு காலம் காலமாக பயன்படுத்தி வரும் கூகுள் கணக்கு நாம் இறந்த பின் என்னவாகும். நம்முடைய கடவுச்சொல் தெரிந்தால் மட்டுமே அந்த கணக்கினை கையாள முடியும். இதற்கு பதிலாக நாம் ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்தாமல் இருந்தால் நம்முடைய கூகுள் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் வேறு மின்னஞ்சலுக்கு கூகுளே அனுப்பிவிடும்.

இவ்வாறு செய்வதனால் நமக்கு பின் நாம் பாதுகாப்பாக வைத்திருக்கும் தகவல்கள் அழியாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Inactive Account Manager  வசதியினை எனேபிள் செய்தால் மட்டுமே கூகுள் நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

Inactive Account Manager வசதியினை எனேபிள் செய்ய முதலில் உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் Account Settings செல்லவும்.

Account Settings செல்ல சுட்டி

பின் Account Management என்னும் பட்டையின் கீழ் உள்ள Learn more and go to setup தேர்வினை கிளிக் செய்யவும்.

இல்லையெனில் நேரடியாக Inactive Account Manager  செல்ல இங்கு கிளிக் செய்யவும். 


கிளிக் செய்தவுடன்  தோன்றும் விண்டோவில் Setup என்னும் பொத்தானை அழுத்தவும்.
நீங்கள் அடுத்து தோன்றும் விண்டோவில் Add mobile phone number என்பதை கிளிக் செய்து மொபைல் எண்னை உள்ளிடவும். அந்த மொபைல் எண்னிற்கு கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும் அதை உள்ளிட்டு மொபைல் எண்னை உறுதிபடுத்திக்கொள்ளவும். பின் Add alternative email என்னும் தேர்வினை அழுத்தி மின்னஞ்சல் முகவரியையும் இணைத்துக்கொள்ளவும்.
ஸ்குரோல் செய்து விண்டோவினை கீழிறக்கவும். அதில் எவ்வளவு காலம் நீங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் , கூகுள் கணக்கில் உள்ள தகவல்களை நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய கோப்புகளை  கூகுள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடவும். 3,6,9 மாதம் அல்லது 1 வருடம் என்று குறிப்பிட்டு கொள்ளலாம்.  அதற்கேற்ப Timeout Period மாறும். 3 மாதம் என்றால் 1 மாதமாகவும், 6,9 மாதம் என்றால் 2 மாதமாகவும், 1 வருடம் என்றால் 3 மாதமாகவும் இருக்கும். 

இந்த Timeout Period என்பது உங்கள் கூகுள் கணக்கினை அழிக்கும் முன்னரோ அல்லது தகவல்களை நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் முன்னர்,  தொலைபேசி எண்னுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பும் காலத்தை குறிப்பிடும். அதாவது உங்கள் கணக்கினை அழிக்கும் முன்னர் தகவல் அனுப்பபடும்.அதற்கு பின் கூகுள் குறிப்பிட்ட காலத்தில் உங்கள் கூகுள் கணக்கு ஒப்பன் செய்யபடவில்லையெனில் கூகுள் இந்த வசதியை செயல்படுத்திவிடும்.


நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனைத்து கூகுள் கணக்கு தொடர்பான தகவல்களை அனுப்ப விரும்புகீறீர்களோ அதனை குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரியினை சேமித்துக்கொள்ளவும்.
தகவல்களை வேறு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டாம் அதற்கு பதில் கூகுள் கணக்கினை நிரந்தரமாக அழித்துவிடலாம் என்றால், Delete my account என்பதற்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்தி Yes என்று தேர்வு செய்து கொள்ளவும். 

பின் இறுதியாக எனேபிள் பொத்தானை அழுத்தி நீங்கள் Inactive Account Manager  வசதியினை உங்கள் கூகுள் கணக்கில் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

செவ்வாய், ஜூன் 04, 2013

ஜாவா - சி#: ஒற்றுமை வேற்றுமைகள் ( Difference Between JAVA and C# )

சி# மொழி, சி++ மொழியிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டது. அதேபோல ஜாவா மொழியும் சி++ மொழியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. எனவே ஜாவாவுக்கும் சி# மொழிக்கும் இடையே பல ஒற்றுமைகளைக் காண முடியும். அதே வேளையில் சி# மொழி, ஒருவகையில் ஜாவா மொழிக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டது எனக் கூறல் தகும். எனவே ஜாவாவில் இல்லாத சில பயனுள்ள கருத்துருக்களை சி# மொழியில் காண முடியும். இனி இரு மொழிகளுக்கும் இடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்ப்போம்.

 ஒற்றுமைகள்

இரு மொழிகளிலும் பொதுவாகக் காணப்படும் கருத்துருக்களைப் பட்டியலிடுவோம். அவற்றுள் சில வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் செயல்பாட்டளவில் ஒன்றாக விளங்குகின்றன.


  1.  ஜாவா புரோகிராமைக் கம்ப்பைல் செய்தால் கம்ப்யூட்டர் சாராத (machine independent) பைட்கோடு கிடைக்கும். அது ஜாவா ரன்டைம் எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கச் சூழலில் (Managed Execution Environment) செயல்படும். சி# புரோகிராமைக் கம்ப்பைல் செய்தால் மொழிசாராத (language independent) இடைமொழிக் குறிமுறை (Intermediate Language Code) உருவாகும். அது பொதுமொழி இயக்கத்தளம் (Common Language Runtime) எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கச் சூழலில் செயல்படும்.
  2.  சி, சி++ மொழிகளில் உள்ள int, float, char, double ஆகிய தரவினங்களும், if, switch, while, do while, for ஆகிய கட்டளை அமைப்புகளும் பெரும்பாலான ஆப்பரேட்டர்களும் ஜாவா, சி# இரு மொழிகளும் தக்கவைத்துக் கொண்டுள்ளன.
  3.  விடுவிக்கப்பட்ட நினைவகப் பகுதிகளைத் தானாக மீட்டெடுத்து, மறு பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் வைக்கும் கார்பேஜ் கலெக்‌ஷன் உண்டு.
  4. ஒரு கிளாஸின் உறுப்புகளை இயக்கநேரத்தில் அறிந்து கொள்ள, சக்தி வாய்ந்த உள்ளறிதல் (Reflection) என்னும் வசதி உள்ளது.
  5. சி, சி++ மொழிகளில் உள்ள ஹெடர் ஃபைல்கள் இரண்டிலும் கிடையாது. அவற்றுக்குப் பதிலாக ஜாவாவில் பேக்கேஜுகளும்ம், சி# மொழியில் அசெம்பிளிகளும் உள்ளன.
  6. அனைத்துக் கிளாஸுகளும் object என்னும் பேஸ் கிளாஸிலிருந்து தருவிக்கப்பட்டவை.
  7. அனைத்து ஆப்ஜெக்டுகளும் ஹீப் நினைவகத்தில் உருவாக்கப்படுகின்றன. புதிய ஆப்ஜெக்ட் உருவாக்க new என்னும் சொல் பயன்படுகிறது.
  8. பல்புரியாக்கம் எனப்படும் மல்ட்டி திரெடிங் உண்டு.
  9. மல்ட்டி திரெடிங் புரோகிராமில் ஒரு திரெட் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட செயல்பாட்டில் இன்னொரு திரெட் தலையிடாமல் இருக்க அச்செயலைப் புரியும் மெத்தடை ஜாவா மொழியில் synchronized என்னும் சொல்மூலம் பூட்டிக் கொள்ள வேண்டும். சி# மொழியில் இதே பணிக்கு locked என்னும் சொல் பயன்படுகிறது.
  10. இரண்டு பேஸ் கிளாஸுகளை அடிப்படையாகக் கொண்ட மல்ட்டிபிள் இன்ஹெரிட்டன்ஸ் கிடையாது. இன்டர்ஃபேஸ்களைப் பயன்படுத்தி அத்தகைய டெரிவ்டு கிளாஸை உருவாக்க முடியும்.
  11. ஒரு கிளாஸுக்குள் இன்னர் கிளாஸுகளை உருவாக்க முடியும்.
  12. குறிப்பிட்ட அணுகுமுறையுடன்கூடிய இன்ஹெரிட்டன்ஸ் கிடையாது.
  13. குளோபல் மாறிகள் (variables), குளோபல் மாறிலிகள் (costants), குளோபல் ஃபங்ஷன்கள் கிடையாது. மாறிகள், மாறிலிகள், ஃபங்ஷன்கள் (மெத்தடுகள்) ஒரு கிளாஸின் உறுப்புகளாகவே இருக்க வேண்டும்.
  14. ஸ்ட்ரிங்குகளும், அர்ரேக்களும் அவற்றின் நீளத்தை தம் அங்கமாகக் கொண்டுள்ளன. எனவே அவற்றின் வரம்பெல்லையை மாறியின் பெயரைக் கொண்டே சோதித்து அறிய முடியும்.
  15. ஆப்ஜெக்டுகளைச் சுட்ட ::, -> ஆகிய ஆப்பரேட்டர்கள் கிடையாது. புள்ளி ஆப்பரேட்டர் மட்டுமே உண்டு.
  16. மாறிகள் அனைத்தும் பயன்படுத்தப்படும் முன்பு அவற்றில் தொடக்க மதிப்பிருத்தப்பட (initialized) வேண்டும்.
  17. இன்டிஜர் மதிப்பை சரி/தவறு என்னும் பூலியன் நிபந்தனைக்குப் பயன்படுத்த முடியாது. அப்பணிக்கு ஜாவாவில் boolean இனமும், சி#-இல் bool இனமும் உண்டு.
  18. இயக்கநேரப் பிழைகளை எதிர்கொள்ள எக்ஸெப்ஷன் ஹேண்டிலிங் என்னும் விரிவான ஏற்பாடு உள்ளது.
  19. எக்ஸெப்ஷன் ஹேண்டிலிங்கில் try பிளாக்குகள் finally பகுதியைக் கொண்டிருக்கும்.
  20. char தரவினம் யுனிக்கோடு கேரக்டரைக் குறிக்கிறது.


 வேற்றுமைகள்

இரு மொழிகளிலும் சற்றே வேறுபாட்டுடன் செயல்படுத்தப்படும் சில கருத்துருக்களைப் பட்டியலிடுவோம்.

  1. ஜாவாவில் int, float, char, double போன்ற மூலத் தரவினங்கள் ஆப்ஜெக்டுகள் அல்ல. சி#-இல் அனைத்துத் தரவினங்களும் ஆப்ஜெக்டுகளே.
  2. சி, சி++ மொழிகளில் உள்ள struct, enum தரவினங்கள் சி# மொழியில் உண்டு. ஜாவாவில் கிடையாது.
  3. ஜாவாவில் for, while, do-while ஆகிய மூன்று கட்டுப்பாட்டு மடக்கிகள் (Control Loops) உள்ளன. சி# மொழியில் நான்காவதாக foreach என்கிற மடக்கியும் உள்ளது.
  4. ஜாவாவில் மெத்தடுக்கான பராமீட்டர்கள் எப்போதுமே மதிப்புகளாகவே அனுப்பப்படுகின்றன (passed by value). சி# மொழியில் மதிப்பு மூலமாகவும், குறிப்பு மூலமாகவும் (passed by reference) ஆகிய இரு வகையிலும் அனுப்பிவைக்க முடியும்.
  5. சி# மொழியில் எந்த அடைமொழியும் இல்லாமல் ஒரு மெத்தடுக்கு மதிப்புவகைப் பராமீட்டர்களை அனுப்பும் முறைதவிர ref, out, params ஆகிய அடைமொழிகளுடன் பராமீட்டர்களை அனுப்பும் வசதியும் உள்ளது. குறிப்புவகைப் பராமீட்டர்களை அனுப்ப ref பயன்படுகிறது. மெத்தடிலிருந்து ஒரு மதிப்பைத் திரும்பப் பெற out பயன்படுகிறது. ஒரு மெத்தடுக்கு வேறுபட்ட எண்ணிக்கையில் பராமீட்டர்களை அனுப்ப params பயன்படுகிறது. ஜாவாவில் ref, out, params கிடையாது.
  6. ஜாவா மொழியில் லேபிளுடன் சேர்ந்துவரும் break கட்டளை உண்டு. ஆனால் சி# மொழியில் அத்தகைய break கிடையாது. அப்பணியை goto கட்டளை மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஜாவாவில் goto கட்டளை கிடையாது.
  7. ஜாவாவில் switch கட்டளையில் int மதிப்புகளை மட்டுமே தரமுடியும். சி#-இல் ஸ்டிரிங் மதிப்புகளையும் பயன்படுத்த முடியும்.
  8. கணக்கீடுகளில் ஒரு தரவினத்தின் வரம்பெல்லை மதிப்புகள் மீறப்படுவதைச் சரிபார்க்க checked கட்டளை சி# மொழியில் உண்டு. ஜாவாவில் கிடையாது.
  9. ஜாவாவில் switch கட்டளையில் ஒரு case-லிருந்து அடுத்த case-க்குத் தானாக இறங்கிச் செல்லும். சி# மொழியில் தானாக இறங்கிச் செல்லது. goto கட்டளை மூலமே இறங்கச் செய்ய வேண்டும்.
  10. ஜாவாவில் ஓர் இன்டர்ஃபேஸில் const இன டேட்டா மெம்பர் இருக்க முடியும். ஆனால் சி#-இல் முடியாது.
  11. சி#-இல் ஒரு கிளாஸிலுள்ள மெம்பர்களுக்கு new மாடிஃபயர் இருக்க முடியும். ஜாவாவில் அவ்வாறு இருக்க முடியாது.
  12. ஜாவாவில் ஒரு கிளாஸின் அனைத்து மெத்தடுகளுமே முன்னியல்பாக (by default) வர்ச்சுவல் மெத்தடுகளே. டெரிவ்டு கிளாஸில் அதே சிக்னேச்சர் உள்ள மெத்தடு பேஸ் கிளாஸின் மெத்தடை ஓவர்ரைடு செய்யும். சி#-இல் வர்ச்சுவல் மெத்தடுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பேஸ் கிளாஸின் ஒரு மெத்தடை டெரிவ்டு கிளாஸில் ஓவர்ரைடு செய்ய வேண்டுமெனில், பேஸ் கிளாஸில் அந்த மெத்தடை virtual எனவும், டெரிவ்டு கிளாஸ் மெத்தடை overwrite எனவும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  13. சி#-இல் ஒரு கிளாஸின் டேட்டா மெம்பர்களை இனிஷியலைஸ் செய்ய static கன்ஸ்ட்ரகடர் உள்ளது. ஜாவாவில் கிடையாது.
  14. ஜாவாவில் பாயின்டர்களைப் பயன்படுத்த முடியாது. சி#-இல் unsafe பிளாக்கினுள் பாயின்டர்களைப் பயன்படுத்த முடியும்.
  15. சி++ மொழியில் இருக்கும் ஆப்பரேட்டர் ஓவர்லோடிங் சி# மொழியில் உண்டு. ஜாவாவில் ஆப்பரேட்டர் ஓவர்லோடிங் கிடையாது.
  16. சி# மொழியில் உள்ள delegate, event ஆகிய கிளாஸ் மெம்பர்கள் ஜாவாவில் கிடையாது. இன்டர்ஃபேஸ், இன்னர் கிளாஸ் ஆகியவற்றின் மூலமாகவே அவற்றின் பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
  17.  properties என்பது சி# கிளாஸின் உள்ளிணைந்த பண்புக்கூறு. ஆனால் ஜாவாவில் இதற்கென மெத்தடுகளை எழுதிச் செயல்படுத்த வேண்டும்.
  18. ஒரு கிளாஸ் அல்லது ஒரு கிளாஸ் மெம்பரை அணுக internal என்னும் அணுகுமுறை சி#-இல் உள்ளது. ஜாவாவில் கிடையாது.
  19. சி# மொழியில் இருக்கும் இண்டெக்ஸர்களுக்கு இணையான கருத்துரு ஜாவாவில் எதுவுமில்லை.
  20. சி# மொழியில் எக்ஸெப்ஷன்களைக் கையாளுகையில் catch பிளாக்குகளைச் சரியான வரிசையில் அமைக்க வேண்டும். ஜாவாவில் எந்த வரிசையிலும் அமைக்கலாம்.
  21. சி, சி++ மொழிகளில் ஸ்டிரிங் என்பது ஒரு கேரக்டர் அர்ரே ஆகும். ஆனால் ஜாவா, சி# மொழிகளில் அவ்வாறில்லை. எனினும் சி# மொழியில் குறிப்பிட்ட அளவில் ஒரு கேரக்டர் அர்ரே போலவே கையாளலாம். ஜாவாவில் அவ்வாறு முடியாது.
  22. சி# கம்ப்பைலர் எக்ஸிகியூட்டபிள் (.exe) ஃபைலை உருவாக்குகிறது. அதனைத் தனித்தியக்கலாம். ஆனால் ஜாவா கம்ப்பைலர் class ஃபைலை உருவாக்கும். அதனை ஜாவா இன்டர்பிரட்டர் மூலம் இயக்க வேண்டும்.

திங்கள், ஜூன் 03, 2013

தமிழ் எங்கள் (Tamil Numeric)

ஒரு மொழி வாழ்வது / அழிவது என்பது அதை பேசும் மக்களால்தான் நடைபெறுகிறது..மராட்டியர் தங்கள் எண்களை உயிரோடு வைத்து உள்ளார்கள் நாம் மறந்து விட்டோம்
நம்மிடம் உள்ள தமிழ் எண்கள்எல்லாம் இப்போது பயன்பெறதா நிலையில் உள்ளது , ஏதோ நூறு ஆண்டுகள் பழமையான புத்தகத்தில் தான் தமிழ் எண்களை பார்க்க முடிகிறது , இதில் நம் மொழி செம்மொழி என்று வேறு பெருமை பேசிக்கொள்கிறோம்
தமிழை காப்பது என்றால் அதன்அங்கமான எண் வடிவங்களையும் காப்பது பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நமது கடமை தானே ??
தமிழ் எண்கள் என்றால் என்ன??
நாம் இப்போது எங்கு பார்த்தாலும் பயன்படுத்தி வருவது இந்திய அரேபிய எண்கள் ஆகும்
தமிழ் எண்கள் எப்படி இருக்கும் ??

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (லட்சம்)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 லட்சம்)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (கோடி)
௰௱௱௲ = 100,000,000 (10 கோடி)
௱௱௱௲ = 1,000,000,000 (100 கோடி)
௲௱௱௲ = 10,000,000,000 (1000 கோடி)
௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்தாயிரங்கோடி)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (கோடானு கோடி)
இந்த எண்களை பயன்பாட்டுக்குகொண்டு வருவது எப்படி ??
# பதிவர்கள ஆகிய நாம் தமிழ் எண்களை முதலில் பயன்படுத்திபழக வேண்டும் / இணையத்தில் எங்கு பார்த்தாலும் தமிழ் எண்களை எழுதி பழக வேண்டும்$ இன்றில் இருந்து வரும் காலம் எல்லாம் என் பதிவுகளில் நீங்கள் தமிழ் எண்களையே பார்க்க முடியும்
# நமது பாடத்திட்டத்தில் தமிழ் எண்களை கட்டாயமாக்க வேண்டும்
# பேருந்துகள் , வாகனங்கள்,அறிவிப்பு பலகைகள் எங்கும் தமிழ் எண்கள் பயன்படுத்த வேண்டும்
சரி நண்பர்களே என்னோடு சேர்ந்து நீங்களும் தமிழ் எண்களை இன்றில் இருந்து பயன்படுத்துவீர்கள் தானே?????


 நன்றி விக்கிபீடியா

சனி, ஜூன் 01, 2013

Advantages & Disadvantages Android OS

I have discussed about the Advantages & Disadvantages Android OS 

HISTORY OF ANDROID OS


Android is a Linux-based operating system for mobile phones such as smartphones and tablet computers. Android provides an open platform for developers to create their own applications for use by a variety of mobile devices. 

Initially, Google Inc..
 bought Android Inc.., newcomers who make software for mobile phones. Then to develop Android, formed the Open Handset Alliance, a consortium of 34 companies for hardware, software, and telecommunications, including Google, HTC, Intel, Motorola, Qualcomm, T-Mobile, and Nvidia. 

At the inaugural release of Android, 5 November 2007, with the Open Handset Alliance Android states support the development of open standards on
 mobile devices. 

On the other hand, Google released the Android code under the Apache license, a license software and open standard mobile device.
 

In this world there are two types of distributors operating system Android.
 The first fully supported by Google or Google Mail Services(GMS) and the second is completely free distribution without direct support Google's otherwise known as the Open Handset Distribution (OHD).

ADVANTAGES ANDROID OS

  • Open Source: Because the system is open, it allows you to easily create their own applications.
  • Sync your Google Account: sync feature with your Google account, it is required to use the Android mobile OS, because everything is accessible by the account, eg Play Store
  • Infinite Communications Media: Facebook, Twitter, Google Plus, MySpace, Digg, and so you can access via the Android OS, because many client applications are popping up allows you to communicate
  •  Wi-Fi & GPS: Certainly Mobile OS Android has fitus Wifi and GPS, both mobile phone with low price to luxury
  • Interfece Interest: interfece Speaking of the Android OS will not have run out, we can set the homescreen itself, or using applications would make it look bored staring at your phone every day.
  • Multitasking: Android OS is also an operating system that brings multitasking (running applications simultaneously), but here too there are shortcomings.
  • Touch Screen: Surely the Android OS using the touch screen feature, menginggat interesting interfece
  • OS Version: Here you will not find any problems installing the application, because nearly all applications or games can be installed on different versions of the Android OS,
  •  Motion Sensor: This makes playing games on the Android OS more attractive, we shake the phone to the left and right to turn the car just like a real car
  •  Play Store: Want to install an application or game, directly download it on the play store, despite the pay, many are also interesting but it's free
  • Upgradeable OS: Android OS can we upgrade to a newer version via OTA directly from the mobile phone (depends on provider Vendors)
  • CFW (Custom Firmware): Because it is Open Source, do not be surprised if you find the Custom Firmware, which the original firmware that has been edited to improve performance. CFW is popular today is made Cynogen


DISADVANTAGES ANDROID OS

  • Battery Boros: Touch Screen, Multitasking, and Internet connection makes the Android OS Battery destroyed section, even if you perform a variety of ways to save battery life, still useless.
  •  Multitasking: Multitasking is useful, but there's also a downside, because believe it or not, the Android OS has so many applications that work even if you do not know (Running Background), this should have an impact on the RAM and Battery. Although there is an application to stop the program, still the program will run again
  • File Size: Make sure you have the MMC with a large capacity, due to the file size Android application or game is quite large, especially HD games can reach sizes of gigabytes (GB)
  •  Processor Type: Android OS has a different processor types such Adreno, Nvidia, Tegra, and so on. This is quite confusing because there are times when the game can only be played on processors supported even if you have already installed the game
  •   Internet Access: Surely it also makes you upset, why??? Because once you activate the internet connection, then all applications using the Internet want to connect without you knowing, for example, look for the latest updates at Play Store application, and it will make your mobile RAM heavy
  •  Privacy Notice: Do you believe your account security Google, Yahoo, Facebook, and so it would be safe to use the Android OS? Try to think of so many applications that you use to access data on accounts related (Permissions), an example application Friendcaster will access your Facebook account after you login through the application. Surely you do not think twice! And I was also being discussed will be the level of account security humility that is in the Android OS (I just hope they can fix it)