திங்கள், ஜூன் 03, 2013

தமிழ் எங்கள் (Tamil Numeric)

ஒரு மொழி வாழ்வது / அழிவது என்பது அதை பேசும் மக்களால்தான் நடைபெறுகிறது..மராட்டியர் தங்கள் எண்களை உயிரோடு வைத்து உள்ளார்கள் நாம் மறந்து விட்டோம்
நம்மிடம் உள்ள தமிழ் எண்கள்எல்லாம் இப்போது பயன்பெறதா நிலையில் உள்ளது , ஏதோ நூறு ஆண்டுகள் பழமையான புத்தகத்தில் தான் தமிழ் எண்களை பார்க்க முடிகிறது , இதில் நம் மொழி செம்மொழி என்று வேறு பெருமை பேசிக்கொள்கிறோம்
தமிழை காப்பது என்றால் அதன்அங்கமான எண் வடிவங்களையும் காப்பது பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நமது கடமை தானே ??
தமிழ் எண்கள் என்றால் என்ன??
நாம் இப்போது எங்கு பார்த்தாலும் பயன்படுத்தி வருவது இந்திய அரேபிய எண்கள் ஆகும்
தமிழ் எண்கள் எப்படி இருக்கும் ??

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (லட்சம்)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 லட்சம்)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (கோடி)
௰௱௱௲ = 100,000,000 (10 கோடி)
௱௱௱௲ = 1,000,000,000 (100 கோடி)
௲௱௱௲ = 10,000,000,000 (1000 கோடி)
௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்தாயிரங்கோடி)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (கோடானு கோடி)
இந்த எண்களை பயன்பாட்டுக்குகொண்டு வருவது எப்படி ??
# பதிவர்கள ஆகிய நாம் தமிழ் எண்களை முதலில் பயன்படுத்திபழக வேண்டும் / இணையத்தில் எங்கு பார்த்தாலும் தமிழ் எண்களை எழுதி பழக வேண்டும்$ இன்றில் இருந்து வரும் காலம் எல்லாம் என் பதிவுகளில் நீங்கள் தமிழ் எண்களையே பார்க்க முடியும்
# நமது பாடத்திட்டத்தில் தமிழ் எண்களை கட்டாயமாக்க வேண்டும்
# பேருந்துகள் , வாகனங்கள்,அறிவிப்பு பலகைகள் எங்கும் தமிழ் எண்கள் பயன்படுத்த வேண்டும்
சரி நண்பர்களே என்னோடு சேர்ந்து நீங்களும் தமிழ் எண்களை இன்றில் இருந்து பயன்படுத்துவீர்கள் தானே?????


 நன்றி விக்கிபீடியா

கருத்துகள் இல்லை: