வெள்ளி, ஜூலை 19, 2013

மென்பொருட்களின் உதவியின்றி Youtube காணொளியை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி…

        
         நாம் எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள ‘youtube downloder’ அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி ‘youtube’ வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம்.

படி 1.  நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.

(வீடியோவின் URL ஐ Adress Bar இல் காணலாம்). அதாவது Adress Bar இல் உள்ள URL லில் உள்ள www. என்பதை மட்டும் அழித்துவிட்டு, அதற்கு பதிலாக ss என type செய்த பின் ENTER ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் இப்போது உங்கள் பக்கம் http://en.savefrom.net/ என்ற தளத்திற்கு தானாகவே திருப்பப்படும்.

படி 2. அங்கு, எந்த ‘format’ இல் [eg.g. 3GP, MP4, FLV etc] வீடியோவை தரவிறக்க வேண்டுமென்பதை தெரிவு செய்துவிட்டு Download இனை ‘CLICK’ செய்தால் போதுமானது. இப்போது வீடியோ தரவிறக்கமாகத் தொடங்கியிருக்கும்.

வியாழன், ஜூலை 18, 2013

கம்ப்யூட்டர் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்

          இன்றைய பதிவில் ஒரு உபயோகமான தகவலோடு உங்களை சந்திக்க வருகிறேன். நான் கண்ட ஒரு வித்தியாசமான சாப்ட்வேர் ஐ உங்களுக்கு அறிமுகபடுத்துகிறேன்.

         அது என்னவென்றால் உங்களுக்கு உங்கள் கணினி உதிரிபாகங்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது. சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாதிருக்கலாம். இது தெரியதர்களுக்கான பதிவு.

          உங்கள் கணினியில் உள்ள மதர்போர்டு, மெமரி, மற்றும் கம்ப்யூட்டர் பற்றிய அனைத்து தகவல்களும் உடனடியாக ஒரே விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.

         அந்த சாப்ட்வேர் இன் பெயர் CPU-Z என்பதாகும். இதன் அளவு மிக குறைந்த அளவுதான். டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

         இதை உங்கள் கணினியில் தரவிறக்கி கொண்டால் போதும். அதன் பின் அதை ரன் செய்தால் அதில் உங்கள் கணினியின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவித்து விடும்.

 படங்களை கீழே காணவும்.

இந்த படமானது உங்கள் CPU- வை பற்றி தெரிவிக்கும்


இது உங்கள் கணினியின் cache மெமரி யின் அளவை காண்பிக்கும்.


மற்றும் மதர்போர்டு, ராம் மெமரி , மற்று கிராபிக்ஸ் பற்றிய அனைத்து அளவுகளையும் இது உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கிறது.


சந்தேகம் இருந்தால் கமெண்ட் மூலம் தெரிவிக்கவும். 

வியாழன், ஜூலை 11, 2013

குறிப்பிட்ட தளங்களை தடுக்க செய்ய உதவும் இலவச மென்பொருள்

       

      இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. சில தளங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம், அலுவலங்களில் சில தளங்களை தடுக்க வேண்டி வரலாம். அவ்வாறு தேவைப்படும் போது எளிதாக The Web Blocker என்ற மென்பொருள் கொண்டு எப்படி குறிப்பிட்ட தளங்களை Block செய்வது என்று பார்ப்போம். 
முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். 
இன்ஸ்டால் செய்து முடித்த Desktop – இல் உள்ள The Web Blocker மென்பொருளை ஓபன் செய்யுங்கள். இப்போது நீங்கள் இதில் இயங்க உங்களுக்கு Password கொடுக்க வேண்டும். 

        அடுத்து சில நொடிகளுக்கு பிறகு அந்த மென்பொருள் ஓபன் ஆகும். நீங்கள் முன்பு கொடுத்த Password கொடுத்து உள்ளே நுழையுங்கள். இப்போது மென்பொருள் கீழே உள்ளது போல இருக்கும். 

 

      இப்போது “Add Address to Block List” என்பதற்கு கீழ் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை கொடுக்கவும். பின்னர் இடது பக்கம் User List என்பதில் எந்த User – க்கு இது பொருந்தும் என்பதையும் நீங்கள் தெரிவு செய்து “Block Address” என்பதை கிளிக் செய்யுங்கள். பெரும்பாலும் All Users என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது Block List என்பதில் நீங்கள் கொடுத்த தளம் சேர்க்கப்பட்டு விடும்.  


இப்போது குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்தால் கீழ் உள்ளவாறு வரும்.


     இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம். Block செய்த பின் மென்பொருளின் Desktop Shortcut – ஐ நீங்கள் நீக்கி விடுவது நல்லது.

நன்றி: karpom



செவ்வாய், ஜூலை 09, 2013

கூகுள் குரோமின் புதிய பாதிப்பை சுலபமாக அப்டேட் செய்வது எப்படி?

       

        கூகுளின் இணைய உலவியான கூகுள் குரோம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து குறைந்த கால கட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 360 மில்லியன் பயணிகள் குரோம் உலவியை பயன்படுத்துகின்றனர். இந்த அபார வளர்ச்சிக்கு எளிமையும், பிரவுசிங் வேகமும் தான் முக்கிய காரணம். மேலும் கூகுள் குரோமில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி புதிய குரோம் வெர்சனை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம்.

    சாதரணமாக கூகுள் குரோம் வெளியிட்ட இரண்டு நாட்களுக்குள் அனைவருக்கும் தானாக அப்டேட் ஆகிவிடும். அப்படி டவுன்லோட் ஆகவில்லை என்றாலும் கவலை இல்லை சுலபமாக குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்க்காக எங்கும் செல்ல வேண்டியதில்லை எதையும் டவுன்லோட் செய்ய தேவையில்லை ஒரு சுலபமான வழி உள்ளது.
       
குரோம் உலவியில் ஓபன் செய்து வலது ஓரத்தில் உள்ள ஸ்பேனர்
போன்ற ஐகானை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள About Google Chrome என்பதை கிளிக் செய்யவும்.


         About Google Chrome என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி குரோமின் புதிய வெர்சன் தானாகவே இன்ஸ்டால் ஆக தொடங்கும். ஒரு சில நிமிடங்களில் உங்கள் குரோம் உலவி அப்டேட் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Relaunch என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் குரோம் உலவி reload புதிய வெர்சன் அப்டேட் ஆகிவிடும். இதை உறுதி செய்ய மறுபடியும் About Google Chrome பகுதிக்கு சென்றால் கீழே இருப்பதை போல விண்டோ வரும். 


         இது போன்று சுலபமாக உங்களின் குரோம் இணைய உலவியை அப்டேட் செய்து கொள்ளலாம். 

        இந்த முறை பல பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாத சில நண்பர்களுக்காக இந்த பதிவு.


நீட்சி உதவியின்றி குரோமில் இணைய பக்கங்களை PDF கோப்பாக அல்லது கூகிள் ட்ரைவ்-இல் சேமிக்க

     உலவிகளுக்கான போரில் கூகுள் குரோம் வெல்ல காரணம் அடிக்கடி வெளியிடப்படும் புதிய வசதிகள். இதற்க்கு முன் இணைய பக்கங்களை PDF கோப்பாக மாற்ற சில நீட்சிகள் மற்றும் இணையதளங்களின் உதவியை நாட வேண்டி இருந்தது. ஆனால் கூகுள் குரோம் பயனர்கள் எந்த நீட்சியின் உதவியின்றி சுலபமாக இணைய பக்கங்களை PDF கோப்பாக தங்களுடைய கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்க்கான வழிமுறையை கீழே பார்ப்போம். 




இணைய பக்கங்களை PDF கோப்பாக சேமிக்க



  • முதலில் குரோம் உலவியில் நீங்கள் PDF கோப்பாக மாற்ற இருக்கும் இணைய பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். 
  • அடுத்து CTRL + P என்பதை ஒருசேர அழுத்துங்கள். 
  • உங்களுக்கு Print Dialogue விண்டோ வந்திருக்கும் அதில் Destination பகுதியில் Save as PDF என்று இருக்கிறதா என பார்த்து கொள்ளவும். இல்லை என்றால் Change பட்டனை அழுத்தி Save as PDF வசதியை தேர்வு செய்து கொள்ளவும்.
  • இப்பொழுது மேலே உள்ள படத்தில் அம்பு குறியிட்டு காட்டியிருக்கும் Save பட்டன் மீது கிளிக் செய்தால் அந்த இணையப்பக்கம் PDF பைலாக உங்கள் கணினியில் சேமிக்கப்படும்.

இணைய பக்கங்களை கூகிள் ட்ரைவ்-இல் சேமிக்க




  • முதலில் குரோம் உலவியில் நீங்கள்கூகிள் ட்ரைவ்-இல் சேமிக்க இருக்கும் இணைய பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். 
  • அடுத்து CTRL + P என்பதை ஒருசேர அழுத்துங்கள். 
  • உங்களுக்கு Print Dialogue விண்டோ வந்திருக்கும் அதில் Destination பகுதியில் Save To Google Drive என்று இருக்கிறதா என பார்த்து கொள்ளவும். இல்லை என்றால் Change பட்டனை அழுத்தி Save To Google Drive வசதியை தேர்வு செய்து கொள்ளவும்.
இனி எந்த நீட்சியின் உதவியுமின்றி குரோமில் இணைய பக்கங்களை PDF கோப்பாக அல்லது கூகிள் ட்ரைவ்-இல் சேமித்து கொள்ளுங்கள்.

குறிப்பு:  மேலே கூற மறந்து விட்டேன் இந்த வசதி குரோமின் புதிய பதிப்புகளில் (Latest version) மட்டுமே உள்ளது. பழைய பதிப்பை உபயோகித்து கொண்டிருந்தால் இந்த லிங்கில் சென்று புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.