திங்கள், அக்டோபர் 21, 2013

எம்பி3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க

             இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் பாடலை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட பாடலின் இணைப்பு படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


           மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின்  Mp32tag பயன்பாட்டை திறக்கவும். தோன்றும்  சாளரத்தில் File மெனு பொத்தானை அழுத்தி Add directory யை தேர்வு செய்யவும்.


            பின் தோன்றும் சாளரத்தில் குறிப்பிட்ட பாடல்களில் தொகுப்பு கோப்பறையை தேர்வு செய்யவும். பின் அனைத்து பாடல்களும் பட்டியலிடப்படும்.


           பின் எந்த பாடலோ அதனை மட்டும் தேர்வு செய்யவும். பின் Extended Tags ஐகானை கிளிக் செய்யவும்.


           அடுத்ததாக தோன்றும் சாளரத்தில் Add cover பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட படத்தை தேர்வு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.


          குறிப்பிட்ட பாடலுக்கு நீங்கள் தெரிவு செய்த படம் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த படம் குறிப்பிட்ட பாடலுக்கு செட் செய்து சேமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தோன்றும்.






        பின் குறிப்பிட்ட படமானது நீங்கள் குறிப்பிட்ட MP3 பாடலுக்கு அமைக்கப்பட்டிருக்கும்.

நன்றி : tamilcomputerinfo

வியாழன், அக்டோபர் 17, 2013

யுட்யூப் காணொளியின் பாடல் வரிகளை பெற

           உலகின் புகழ்பெற்ற காணொளி தளமான யுட்யூப் தளத்தில் தினமும் பல்லாயிர கனக்கான காணொளிகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. ஒரு சிலர் காணொளியை திரவிறக்கம் செய்யும் முன்னரே அதன் வரிகளை கேட்க விரும்புவர்கள். ஆனால் அவர்களுடைய கணினியில் ஒலிபெருக்கி போன்ற இசை கேட்பு சாதனங்கள் இருக்காது எனவே குறிப்பிட்ட காணொளியை ழுமையாக பதிவிறக்கம் செய்து அதனை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்த பின்னரே அதனை கேட்க முடியும். இதற்கு பதிலாக யுட்யூப் தளத்தில் இருந்து காணொளியை திவிறக்கம் செய்யும் போதே அதன் வரிகளை எழுத்து வடிவில் பெற முடியும்.

    இதற்காக நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக யுட்யூப் தளத்திலேயே பெற முடியும்.  இதற்கு நாம் பயன்படுத்தும் உலாவியில் நீட்சியை இணைத்துகொண்டால் போதுமானது.

        இந்த பாடல் வரிக்கான நீட்சியானது நெருப்புநரி, குரோம், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் ஒபேரா உலாவிகளுக்கு மட்டும் உள்ளது.
 

           சுட்டியில் குறிப்பிட்ட இணைப்பினை பயன்படுத்தி உலாவியில் நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை உலாவியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் யூடுப் தளத்தை ஒப்பன் செய்து குறிப்பிட்ட வீடியோவை ஒப்பன் செய்யவும். அப்போது அந்த வீடியோக்கான பாடல் வரி தோன்றும். மேலும் இந்த வசதியை நமது விருப்பபடி மற்றியமைத்து கொள்ளவும் முடியும்.


             அமைப்பினை பயன்படுத்தி விரும்பியவாறு இந்த பாடல்வரி நீட்சியை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

நன்றி: tamilcomputerinfo

செவ்வாய், அக்டோபர் 15, 2013

பிடிஎப் கோப்புகளை பிரிக்க, சேர்க்க மற்றும் பக்கங்களை மறுவரிசைப்படுத்த உதவும் இலவச மென்பொருள்

              பிடிஎப் கோப்பினை ஒருமுறை உருவாக்கி விட்டால் அதனை உடைக்கவோ, மறுவரிசைப்படுத்தவோ முடியாது மேலும் இவ்வாறு உருவாக்கும் பிடிஎப் கோப்புகளில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. என்றுதான் பலரும் நினைத்துகொண்டு இருப்பார்கள் ஆனால் பிடிஎப் கோப்பினை விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.



மென்பொருளை தரவிறக்க சுட்டி

       மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறக்கவும். Plugins வரிசையின் கீழ் உள்ள இணைப்பினை பயன்படுத்தி பிடிஎப் கோப்பினை தேவைகேற்ப தலைகீழாக மாற்றவும், பிரிக்கவும், இணைக்கவும் வேண்டியவாறு பக்கங்களை திருத்திக்கொள்ளவும். இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.

இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். பிடிஎப் கோப்புகளை திருத்தம் செய்வதற்கு அருமையான மென்பொருள் ஆகும்.

சனி, அக்டோபர் 12, 2013

VLC ஊடக இயக்கியில் யூடியூப் காணொளியை நேரடியாக இயக்க

     VLC ஊடக இயக்கினது இசை மற்றும் காணொளியை இயக்க உதவும் மென்பொருள் ஆகும். இந்த இயக்கினது தற்போது அதிகமான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமே இந்த மென்பொருளுடைய எளிமையான தோற்றமும். இலவசம் என்ற ஒன்று மட்டுமே ஆகும். விஎல்சி  ஊடக இயக்கியில் அதிகமான வசதிகள் மறைந்து உள்ளன. அந்த வகையில் மறைந்துள்ள வசதிதான் நேரடியாகவே யூடியூப் காணொளியை விஎல்சிஊடக இயக்கியில் இயக்கி பார்க்கும் வசதி ஆகும். இதனை செய்ய விஎல்சி ஊடக இயக்கியை திறக்கவும். பின் Media – Open Network Stream என்பதை தேர்வு செய்யவும்.


           தேர்வு செய்யதவுடன் தோன்றும் சாளரத்தில் காணொளி URLயை ஒட்டவும் செய்யவும். பின் Play என்னும் பொத்தானை அழுத்தவும். 


           இப்போது காணொளியை நேரடியாகவே VLC ஊடக இயக்கியில்  காண முடியும். கணினியில் ப்ளாஷ் பிளேயர் இல்லையெனில் வீடியோவினை இணையத்தில் காண முடியாது. அதுபோன்ற சமயங்களில் இந்த VLC ஊடக இயக்கியி உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். காணொளியினை கோப்பை மாற்றி சேமிக்கும் வசதியும் உள்ளது.

புதன், அக்டோபர் 09, 2013

ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசியை கணினிமூலம் கட்டுபடுத்திட உதவிடும் பயன்பாடு


  ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசியை கணினிமூலம் Airdroid என்ற பயன்பாட்டின் வாயிலாக கட்டுபடுத்திடமுடியும்.

       இன்று ஏராளமான பயன்பாடுகள் இந்த செயலிற்காக நமக்கு கம்பியில்லாத வழியில் உதவதயாராக உள்ளன  ஆனால் அவைகள் நம்முடைய செல்லிடத்து பேசியில் அதிகஅளவு நினைவகத்திறனை அபகரித்து கொள்கின்றன அதனால்  செல்லிடத்து பேசியின் செயல்ஆனது எருமைமாடு நடந்து செல்வதை போன்று   மிகமெதுவாக ஆகிவிடுகின்றன அல்லது செயலிழந்த நிலைக்கு தள்ளபடுகின்றன  ஆனால் இந்த Airdroid என்ற பயன்பாடு அவைகள் எதுவும் இல்லாமல் மிகச்சிறந்ததாக அமைகின்றது.

          முதலில்  இதனை நம்முடைய   ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் சாதனத்தில் நிறுவி செயல்படுத்திகொள்க உடன்  திரையில் நம்முடைய யூஆர்எல் முகவரி,   கடவுச்சொற்கள் போன்றவை படத்திலுள்ளவாறு  தோன்றிடும்.


                  பிறகு நம்முடைய கணினியில் தேடுபொறியை செயல் படுத்தி அதில் நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் சாதனத்தின் யூஆர்எல் முகவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன்  நம்முடைய கடவுச்சொற்களை உள்ளீடு செய்யுமாறு கோரிநிற்கும்  நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் சாதனத்தின்  கடவுச்சொற்களை உள்ளீடு செய்து  Login. என்ற என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் சாதனத்தை கணினிவாயிலாக கட்டுபடுத்திடமுடியும்.


செவ்வாய், அக்டோபர் 08, 2013

" VIRTUAL BOX "என்னும் சிறப்பு மெய்நிகர் இயக்கமுறைமைக் கருவி

              

               இயக்கமுறைமைக்குள் மற்றொரு இயக்கமுறைமையை இயங்கசெய்ய பயன்படுவதே இந்த  மெய்நிகர் கணினி எனும் அமைவாகும் அதாவது கணினிக்குள் மற்றொரு கணினி இயங்குவதை போன்று செயல்படுவதை மெய்நிகர் கணினி என அழைப்பார்கள் இவ்வாறு  ஒரு கணினிக்குள் மற்றொரு மெய்நிகர் கணினியை செயல்படுத்திட VirtualBox எனும் திறமூல மென்பொருள் பயன்படுகின்றது  இதனை சன்மைக்ரோசிஸ்டம்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கி பராமரித்து வருகின்றது  நாம் புதிய இயக்கமுறைமைக்கு மாறுவதால் நம்முடைய கணினியில் கைவசமுள்ள தரவுகள் அழிந்துவிடுமோ என  நம்மில் பலர்  அதிகஅளவிற்கு பயப்படுவோம் அவ்வாறானவர்களின் பயத்தினை போக்கி தாம் செயல்படுத்தும் சூழலிலேயே ஒரு  உரையாடல் பெட்டிபோன்ற அமைவில் புதிய இயக்கமுறைமையை செயல்படுத்தி நன்றாக செயல்படுகின்றது என நம்முடைய மனதில் தைரியம் வந்த பிறகு புதிய இயக்கமுறைமைக்கு நாம் மாறலாம் என தெளிவு படுத்தி கொள்ள இந்த   VirtualBox எனும் திறமூல மென்பொருள் பயன்படுகின்றது.



         நடப்பு இயக்க முறைமையின் சூழலில் புதிய இயக்கமுறைமையும் செயல்படுமாறு செய்திட இந்த  VirtualBox எனும் திறமூல மென்பொருள் உதவிபுரிகின்றது.இது விண்டோ லினக்ஸ் மேக்ஸ் ஆகிய இயக்க முறைமைக்குள் செயல்படுகின்றது . இதனை செயல்படுத்தி பார்ப்பதற்காக http://download.virtualbox.org/virtualbox/UserManual.pdf  என்பதில் கூறப்பட்டுள்ள படிப்படியான வழிமுறையை முதலில் நன்கு கற்றறிந்துகொண்டு அதன்பின் இந்த மெய்நிகர் கணினியை நடைமுறையில் செயல்படுத்தி பார்த்திடுக   http://www.virtualbox.org/wiki/Downloads என்ற இணைய தளத்திலிருந்து இதனுடைய சமீபத்திய பதிப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.



         முதலில் இதனை செயல்படுத்துவதற்கான ரேமின் அளவை 75 சதவிகிதமாக இதனை அமைவு செய்திடும்போது குறிப்பிடுக .அதன்மூலம் மற்ற மென்பொருட்களை ஒரேசமயத்தில் இணையாக சிரமமின்றி செயல்படுத்திடமுடியும் . இந்த VirtualBox இன்மீது இடம்சுட்டியை வைத்து சொடுக்குவதன் மூலம் நடப்பு இயக்கமுறைமையிலிருந்து மெய்நிகர் கணினியில் செயல்படும் இயக்கமுறைமைக்கு மாறிகொள்ளமுடியும் பின்னர் நடப்பு கணினியின் இயக்கமுறைமைக்கு மாறிட விசைப்பலகையில் வலதுபுறமாக உள்ள Ctrlஎன்ற விசையை தெரிவுசெய்து அழுத்துக உடன்  இடம்சுட்டியானது நடப்பு கணினியின் இயக்கமுறைமைக்கு மாறிவிடும்.