உலகின் புகழ்பெற்ற காணொளி தளமான யுட்யூப் தளத்தில் தினமும் பல்லாயிர கனக்கான காணொளிகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. ஒரு சிலர் காணொளியை திரவிறக்கம் செய்யும் முன்னரே அதன் வரிகளை கேட்க விரும்புவர்கள். ஆனால் அவர்களுடைய கணினியில் ஒலிபெருக்கி போன்ற இசை கேட்பு சாதனங்கள் இருக்காது எனவே குறிப்பிட்ட காணொளியை ழுமையாக பதிவிறக்கம் செய்து அதனை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்த பின்னரே அதனை கேட்க முடியும். இதற்கு பதிலாக யுட்யூப் தளத்தில் இருந்து காணொளியை திவிறக்கம் செய்யும் போதே அதன் வரிகளை எழுத்து வடிவில் பெற முடியும்.
இதற்காக நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக யுட்யூப் தளத்திலேயே பெற முடியும். இதற்கு நாம் பயன்படுத்தும் உலாவியில் நீட்சியை இணைத்துகொண்டால் போதுமானது.
இந்த பாடல் வரிக்கான நீட்சியானது நெருப்புநரி, குரோம், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் ஒபேரா உலாவிகளுக்கு மட்டும் உள்ளது.
- நெருப்புநரி உலவிக்கான சுட்டி
- குரோம் உலவிக்கான சுட்டி
- சபாரி உலவிக்கான சுட்டி
- ஒபேரா உலவிக்கான சுட்டி
- இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவிக்கான சுட்டி 32பிட் மற்றும் 64பிட் (IE 8 / 9 / 10)
சுட்டியில் குறிப்பிட்ட இணைப்பினை பயன்படுத்தி உலாவியில் நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை உலாவியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் யூடுப் தளத்தை ஒப்பன் செய்து குறிப்பிட்ட வீடியோவை ஒப்பன் செய்யவும். அப்போது அந்த வீடியோக்கான பாடல் வரி தோன்றும். மேலும் இந்த வசதியை நமது விருப்பபடி மற்றியமைத்து கொள்ளவும் முடியும்.
அமைப்பினை பயன்படுத்தி விரும்பியவாறு இந்த பாடல்வரி நீட்சியை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.
நன்றி: tamilcomputerinfo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக