இயக்கமுறைமைக்குள் மற்றொரு இயக்கமுறைமையை இயங்கசெய்ய பயன்படுவதே இந்த மெய்நிகர் கணினி எனும் அமைவாகும் அதாவது கணினிக்குள் மற்றொரு கணினி இயங்குவதை போன்று செயல்படுவதை மெய்நிகர் கணினி என அழைப்பார்கள் இவ்வாறு ஒரு கணினிக்குள் மற்றொரு மெய்நிகர் கணினியை செயல்படுத்திட VirtualBox எனும் திறமூல மென்பொருள் பயன்படுகின்றது இதனை சன்மைக்ரோசிஸ்டம்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கி பராமரித்து வருகின்றது நாம் புதிய இயக்கமுறைமைக்கு மாறுவதால் நம்முடைய கணினியில் கைவசமுள்ள தரவுகள் அழிந்துவிடுமோ என நம்மில் பலர் அதிகஅளவிற்கு பயப்படுவோம் அவ்வாறானவர்களின் பயத்தினை போக்கி தாம் செயல்படுத்தும் சூழலிலேயே ஒரு உரையாடல் பெட்டிபோன்ற அமைவில் புதிய இயக்கமுறைமையை செயல்படுத்தி நன்றாக செயல்படுகின்றது என நம்முடைய மனதில் தைரியம் வந்த பிறகு புதிய இயக்கமுறைமைக்கு நாம் மாறலாம் என தெளிவு படுத்தி கொள்ள இந்த VirtualBox எனும் திறமூல மென்பொருள் பயன்படுகின்றது.
நடப்பு இயக்க முறைமையின் சூழலில் புதிய இயக்கமுறைமையும் செயல்படுமாறு செய்திட இந்த VirtualBox எனும் திறமூல மென்பொருள் உதவிபுரிகின்றது.இது விண்டோ லினக்ஸ் மேக்ஸ் ஆகிய இயக்க முறைமைக்குள் செயல்படுகின்றது . இதனை செயல்படுத்தி பார்ப்பதற்காக http://download.virtualbox.org/virtualbox/UserManual.pdf என்பதில் கூறப்பட்டுள்ள படிப்படியான வழிமுறையை முதலில் நன்கு கற்றறிந்துகொண்டு அதன்பின் இந்த மெய்நிகர் கணினியை நடைமுறையில் செயல்படுத்தி பார்த்திடுக http://www.virtualbox.org/wiki/Downloads என்ற இணைய தளத்திலிருந்து இதனுடைய சமீபத்திய பதிப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.
முதலில் இதனை செயல்படுத்துவதற்கான ரேமின் அளவை 75 சதவிகிதமாக இதனை அமைவு செய்திடும்போது குறிப்பிடுக .அதன்மூலம் மற்ற மென்பொருட்களை ஒரேசமயத்தில் இணையாக சிரமமின்றி செயல்படுத்திடமுடியும் . இந்த VirtualBox இன்மீது இடம்சுட்டியை வைத்து சொடுக்குவதன் மூலம் நடப்பு இயக்கமுறைமையிலிருந்து மெய்நிகர் கணினியில் செயல்படும் இயக்கமுறைமைக்கு மாறிகொள்ளமுடியும் பின்னர் நடப்பு கணினியின் இயக்கமுறைமைக்கு மாறிட விசைப்பலகையில் வலதுபுறமாக உள்ள Ctrlஎன்ற விசையை தெரிவுசெய்து அழுத்துக உடன் இடம்சுட்டியானது நடப்பு கணினியின் இயக்கமுறைமைக்கு மாறிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக