வெள்ளி, அக்டோபர் 24, 2014

உங்கள் மடிகணனி/கணனி இணைய இணைப்பை கம்பில்ல தொழில்நுட்பத்தில் (Wifi) பகிர

     


       வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் Internet பயன்படுத்துவதற்கு லேன், கேபிள் மோடம், டயல்-அப், யூ.எஸ்.பி டோங்கல், வைஃபை ( LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle, Wi-Fi) போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள்.

இதனை  எந்தவொரு Router-ம் இல்லாமல் உங்கள்  கணினியில் இருந்தவாறே கம்பில்ல முறையில்   Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook போன்றவற்றுக்கு  கம்பில்ல தொழில்நுட்பம் மூலம் இணைய இணைப்பை  ஏற்படுத்த முடியும். இதற்கு Virtual Router என்ற மென்பொருள் பயன்படுகிறது. Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் Windows 7 Operating System கட்டாயம் இருக்க வேண்டும். உங்கள் மடிகணனி/ கணனி எனில் Wireless Device -ம் இணைத்திருக்க வேண்டும்.

விர்சுவல் ரௌட்டர் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி: Download virtual router download for windows 7
  1. முதலில் சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளவும்.
  2. நிறுவிய Virtual Router மென்பொருளை திறந்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும், அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும், Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு கடவுச்சொல் கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்.
  3. இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் கம்பில்ல இணைப்பு பகிரப்படும். 
    இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்த வேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த கடவுச்சொல் கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

        இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய கைகளில் பயன்படுத்தக்கூடிய அதி நவீன ஸ்மார்ட்போன், டேப்ளட் கணினிகளிலும் இணைய இணைப்பை எளிதாக ஏற்படுத்திப் பயன்படுத்த முடியும்.

வியாழன், அக்டோபர் 09, 2014

ஜி மெயிலில் தேவையில்லாத முகவரியா ??



         இன்றைக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது. பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது. அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படுகின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந்தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும். 


      ஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச்சலூட்டும் உதவியாக உள்ளது. ஜி மெயிலில் இருக்கும் தேவையில்லாத முகவரியை நீக்க…! நாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர்களின் முகவரியும் பதிவு செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது. இவ்வாறு பதிய செய்யும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம். 

           ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும். “Settings” திரை காட்டப்படுகையில், “General” என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் தேர்வு செய்திடவும். இங்கு கீழாகச் சென்று, “Complete contacts for autocomplete” என்று இருப்பதனைக் காணவும். அங்குள்ள “I’ll add contacts myself” என்ற ரேடியோ பொத்தானை தேர்ந்தெடுத்து அமைக்கவும். தொடர்ந்து “Save Changes” என்பதில் சொடுக்கி வெளியேறவும். அடுத்த முறை நீங்களாக பதிவு செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முகவரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது.

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

உலாவியில் குக்கீகள் (Cookies) என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ?




            Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாமல் உள்ள இந்த வார்த்தை நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் பெர்சனல் கணினிகளில் Cookies இல்லாமல் நம்மால் வேலையே செய்ய முடியாது என்ற அளவுக்கு அது நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை பற்றிய விரிவான அலசல் தான் இந்தப் பதிவு. 

Cookies என்றால் என்ன? 

பொதுவாக Cookies என்பது குறிப்பிட்ட தளத்தில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர்க்கு ஒரு சிறிய டெக்ஸ்ட் பைலை அனுப்பும். அது தான் Cookie.  

என்ன இருக்கும் அதில்? 


             தினமும் இணையத்தில் இயங்கும் நாம் நிறைய தளங்களை பார்ப்போம், படிப்போம். அதில் நம் தகவல்களை தருவோம்.  சில செட்டிங்க்ஸ் மாற்றுவோம், குறிப்பாக மொழி, ஒரு வீடியோ எப்படி தெரிய வேண்டும்? என்பது போன்றவை. ஒரு தளத்தில் நமக்கு விருப்பமான ஒன்றை தேடி இருப்போம், அடுத்த முறை மீண்டும் அந்த தளத்துக்கு செல்லும் போது நம்முடைய முந்தைய வருகையை நினைவில் வைத்து அது தொடர்பான செய்திகளை அடுத்த முறை நமக்கு காட்டும். இதன் மூலம் நம் வேலை எளிதாகும்.

எப்படி செயல்படுகிறது? 

            இதற்கு உதாரணம் Youtube. தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்ட வகையான காணொளியை பார்த்தால் அது தொடர்பான காணொளிகளை தான் அடுத்த முறை நீங்கள் செல்லும் போதும் காட்டும். 

          ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் போதும் இதே நினைவூட்டல்களை நீங்கள் பார்த்திருக்கலாம். 

            எந்த தளத்தில் நீங்கள் சென்றாலும் அதில் வைரஸ் போன்ற உங்கள் கணினிக்கு பாதிப்பு தரும் எந்த ஒரு விசயத்தையும் இது சேமிக்காது, நினைவூட்டாது. இது தான் இதன் மிகப்பெரிய நன்மை.

     அத்தோடு இணையத்தில் காட்டப்படும் விளம்பரங்கள் கூட இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. முக்கியமாக Google Adsense. நீங்கள் இணையத்தில் எதை தேடுகிறீர்கள் என்பதை பொறுத்தே இந்த விளம்பரங்கள் அமையும். இது ஒரு வகையில் உங்களுக்கு நன்மைதான். 

        இப்போது இதன் அவசியம் தெரிந்து இருக்கும் உங்களுக்கு. இதை Allow செய்யாமல் விட்டால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய கணினியில் இணையத்தை பயன்படுத்துவது போல இருக்கும். இதனால் முக்கியமாக உங்கள் நேரம் விரயம் ஆகும். 

         பல வகையான Cookies கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று Third-party cookie. இதை மிக எளிதாக சொல்லி விடுகிறேன். நீங்கள் இப்போது கற்போம் தளத்தை படிக்கிறீர்கள் பதிவின் மேலே ஒரு விளம்பரம் தெரிகிறது அது ad.123ad.com என்று சேமிக்கப்படும். அடுத்து பிளாக்கர் நண்பன் தளத்துக்கு செல்லும் போது ஒரு விளம்பரம் வரலாம். இப்போது அதுவும்  ad.123ad.com என்று சேமிக்கப்படும். இது தொடர் சங்கிலி போல தொடரும். இதை தான் நாம் Third-party cookie என்று நாம் சொல்கிறோம். 

மற்ற சில Cookies 

Session cookie – குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும். 
Persistent cookie – பல நாட்களுக்கு. கிட்டத்தட்ட எப்போதும். 
Secure cookie – பாதுகாப்பானது என்று சொல்லலாம்.[https என்று உள்ள URL களில் இது Save ஆகும்]  
HttpOnly cookie – இப்போதைய ப்ரௌசெர்களில் இருப்பது.
Supercookie -  Suffix டொமைன்கள் உடைய Cookie உதாரணம் – .co.uk, co.in
Zombie cookie – விடாக்கண்டன். Delete செய்தாலும் அழியாது. ஆனால் இதனால் தீமை எதுவும் இல்லை. 

இதன் நன்மைகள் மேலே சொன்னதிலேயே உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதனால் சில தீமைகளும் உள்ளன. 

          குறிப்பிட்ட தளங்களுக்குள் நுழைய நீங்கள் ஜிமெயில், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் போது செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம். 

        சொந்தக் கணினி அல்லாத இடங்களில் பயன்படுத்தும் போது Cookies save ஆனால், உங்கள் தரவுகள் சேமிக்கப்படுகிறது என்று அர்த்தம். இதிலும்  செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம். 

          நீங்கள் அல்லாது வேறு யாரேனும் உங்கள் கணினியை பயன்படுத்தினால் உங்கள் தரவுகளை அவரும் அறிவார். அவசியமற்ற தளங்களில் Cookies Save ஆனால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். 

         இது போன்ற தீமைகளை நீங்கள் தவிர்க்கும் வாய்ப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது. Cookies என்பது உங்கள் ப்ரௌசெரில் நீங்கள் தரும் தகவல்கள் தான். நீங்கள் கொடுக்காமல் குறிப்பிட்ட தளத்தால் எதையும் செய்ய இயலாது. எனவே இவற்றில் பாதுகாப்பாக இருப்பது நம் கைகளில் தான் உள்ளது. 

Cookies களை கையாளுவது எப்படி? 

            நாம் பயன்படுத்தும் உலாவிகளில் தான் Cookies உள்ளது என்றேன். அதை கட்டுப்படுத்தும், கையாளும் செயல்கள் நமக்கு எட்டும்படி தான் உள்ளன.  கையாளுவது என்றால் குறிப்பிட்ட தளத்தின் Cookies Save ஆவதை தடுக்கலாம், Third Party Cookies களை தடுக்கலாம். இதை செய்ய Opt-out என்ற ஒரு முறையும் உள்ளது. 

வியாழன், ஜூலை 17, 2014

இலவச பதிவிறக்க மென்பொருள்கள்

          இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருப்பின் பதிவிறக்கம் துண்டிக்கப்படும். மீண்டும் பதிவிறக்கத்தை தொடரும் போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து பதிவிறக்கம் தொடரும். இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமெனில் பதிவிறக்க மென்பொருள் உதவியுடன் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும். இலவசமாக இணையத்தில் பதிவிறக்க மென்பொருள்கள் கிடைக்கிறன. அவை

1.GETGO


       இந்த GETGO மென்பொருள் உதவியுடன் நேரிடையாக யுடுப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்புநரி மற்றும் கூகுள் குரோம் உலாவியின் மூலமாக பதிவிறக்கம் செய்யும் போது நேரிடையாக GETGO மென்பொருள் உதவியுடன் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். GETGO  மென்பொருள் உதவியுடன் அதிவேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி 

2.Free Download Manager (FDM)


         இது ஒரு திறந்த மூல மென்பொருள் ஆகும். மேலும் ப்ளாஷ் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவும், இந்த மென்பொருளில் வசதி உள்ளது. இதனை போர்ட்டபிள் மென்பொருளாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி

3.Internet Download Accelerator (IDA)


         இந்த மென்பொருள் இலவச பதிப்பாகும். மேலும் உலாவிகளில் இருந்து நேரடி பதிவிறக்கம் செய்யவும். யூடுப் தளத்திலிருந்து காணொளிகளை நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


திங்கள், மார்ச் 03, 2014

முகப்புப்படத்தில் (வால்பேப்பரில் ) திரைப்படம் பார்க்க புதிய வசதி.


           கம்ப்யூட்டரில் பாட்டு கேட்டுக்கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம். பலருக்கும் பரிட்சயமானது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில் மனதுக்கு பிடித்த பாடல்களை ஒலிக்கசெய்த படி வேலை பார்ப்பது இனிமையானதும் கூட!

          ஆனால் கம்ப்யூட்டரில் திரைப்படம் பார்த்துக்கொண்டே வேலை பார்ப்பது சாத்தியமா?

          டெஸ்க்டாப்பில் திரைப்படம் ஒடத்துவங்கிய பின் கம்ப்யூட்டர் திரையை அத்திரைப்படமே ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால் அதில் உள்ள மற்ற அம்சங்களை பயன்படுத்துவது என்பது கடினமானது. அதோடு படம் பார்த்து கொண்டே வேலை செய்வது என்பதும் கடினமானது தான்.

          இருப்பினும் ஏதாவது காரணத்திற்காக டெஸ்க்டாப்பில் படம் பார்த்து கொண்டே கம்ப்யூட்டரிலும் சில வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வழியும் இருக்கிறது.

          டெஸ்க்டாப்மூவி என்னும் கம்ப்யூட்டர் செயலி இதனை சாத்தியமாக்குகிறது.இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் அதன் மூலம் கம்ப்யூட்டரில் திரைப்படங்களை வால்பேப்பராக பார்த்து ரசிக்கலாம். அழகிய புகைப்படங்களை டெஸ்க்டாப் வால்பேப்பராக வைத்து கொள்வது போல இந்த செயலி திரைப்படத்தையே வால்ப்பேப்பராக ஆக்கித்தருகிறது.

          திரைப்படமே வால்பேப்பராக மாற்றப்படுவதால் டெஸ்க்டாப்பில் உள்ள மற்ற ஐக்கான்கள் எல்லாம் அப்படியே இருக்கும்.எனவே அவற்றில் எது தேவையோ அதனை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த ஐக்கான்களின் விண்டோவின் அளவை இஷ்டம் போல மாற்றியமைத்து கொள்ளலாம் என்பதால் அவற்றை சின்னதாக்கி கொண்டு தொடர்ந்து திரைப்படத்தை பார்த்து கொண்டே இருக்கலாம்.

        இந்த செயலி மூலமே படத்தின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். திரைப்படம் பார்த்து கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்துவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.ஆனால் அந்த வசதியை உருவாக்கி தருகிறது இந்த டெஸ்க்டாப்மூவி செயலி.

       பால்கோசாப்ட் என்னும் இணையதளத்தில் இருந்து இதனை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.இதைத்தவிர மேலும் பல பயனுள்ள செயலிகள் இந்த தளத்தில் இருக்கின்றன.

இணையதள முகவரி: http://falcosoft.hu/softwares.html#desktopmovie

வெள்ளி, பிப்ரவரி 14, 2014

சற்றே விலகி நில்லேன் சுட்டி !



சுட்டி (கர்சர்) படுத்தும் பாடு என்று புலம்பிய அனுபவம் உங்களுக்கு உண்டா?. சுட்டி (கர்சர்) என்ரால் மவுஸ் கர்சர்.

இணையத்தில் அதிகம் டைப் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி இப்படி புலம்ப நேரலாம். அதாவது டைப் செய்யும் போதெல்லாம் எந்த இடத்தில் டைப் செய்கிறோமோ சரியாக அந்த இடத்தில் மவுசின் கர்சர் கோடு போலவே கைகாட்டி கொண்டிருக்கும்.

சுட்டிக்காட்டுவது தான் இதன் நோக்கம் என்றாலும் டைப் செய்யும் போது மட்டும் இது இடையூறாக தோன்றலாம்.டைப் செய்த எழுத்து சரியானது தானா இல்லையா என்ற சந்தேகத்தை இது உண்டாக்கலாம்.சில நேரங்களில் பார்த்தால் தவறான எழுத்து போல தோன்றும் ஆனால் கர்சரை நகர்த்தி விட்டு கவனித்தால் எந்த பிழையும் இருக்காது.

இது தேவையில்லாத‌ இடையூறு மட்டும் அல்ல கவனச்சிதறலும் கூட!.அதிலும் தீவிர கவனம் கொண்டவர்களுக்கு இது மிகுந்த எரிச்சலை தரும்.

இது போன்ற நேரங்களில் தான் கர்சர் புலம்ப வைப்பதோடு சற்றே விலகியிறேன் பிள்ளாய் என்று நவீன நந்தனாராக கெஞ்ச வைக்கும். இதற்கு அழகான தீர்வாக‌ கர்சரை அப்படியே  ஓரங்கட்டி செல்லும் சேவை ஒன்று இருக்கிறது.

பார்க் கர்சர் அசைடு என்னும் அந்த சேவை மூலமாக டைப் செய்யும் போது கர்சர் இடையூறாக இல்லாத அளவுக்கு அதனை இணைய பக்கத்தின் ஏதாவது ஒரு மூளைக்கு நகர்த்தி சென்று விட இந்த சேவை உதவுகிறது.

இந்த சேவை மூலம் கரசரை நகர்த்த முடிவதோடு அது எந்த இடத்தில் நிற்க வேண்டும் என தீர்மானிக்கும் வசதியும் இருக்கிறது.(ஐந்து விதமான இடங்களில் நிறுத்தலாம்).அதோடு மீண்டும் கரசரை பழைய நிலைக்கு கொண்டு வர எத்தனை விசைகள் தேவை என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்.

சுட்டி (கர்சர்) எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கலாம்.எதையும் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்யும் அவசிய‌ம் இல்லாமலே இதனை பயன்படுத்தலாம்.

சின்ன சேவை தான். ஆனால் இணையத்தின் பயன்பாட்டை மேலும் மெருகேற்றும் சின்னஞ்சிறிய சேவை.

இந்த சேவைய உருவாக்கியிருப்பது கொல்கத்தாகாராரான அனில் குப்தா என்பவர்.


இணையதள முகவரி: https://sites.google.com/site/aghappy/