செவ்வாய், மார்ச் 14, 2017
செவ்வாய், ஜூன் 02, 2015
ஆங்கிலம்....???
அடையாளம் (Labels):
ஊக்குவித்தல் (Motivation)
இடம் (Location):
Coimbatore, Tamil Nadu, India
வெற்றி...
அடையாளம் (Labels):
ஊக்குவித்தல் (Motivation)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
சனி, மார்ச் 07, 2015
ஓட்டுனருக்கு உபயோகமான தகவல்கள்
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.
- பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
- சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
- சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
- ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
- ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.
- ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
- கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
- நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
- வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
- கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
- நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் உறிஞ்சும். விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
- நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
அடையாளம் (Labels):
பொதுப்படையான(General)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
வெள்ளி, அக்டோபர் 24, 2014
உங்கள் மடிகணனி/கணனி இணைய இணைப்பை கம்பில்ல தொழில்நுட்பத்தில் (Wifi) பகிர
வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் Internet பயன்படுத்துவதற்கு லேன், கேபிள் மோடம், டயல்-அப், யூ.எஸ்.பி டோங்கல், வைஃபை ( LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle, Wi-Fi) போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள்.
இதனை எந்தவொரு Router-ம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே கம்பில்ல முறையில் Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook போன்றவற்றுக்கு கம்பில்ல தொழில்நுட்பம் மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்த முடியும். இதற்கு Virtual Router என்ற மென்பொருள் பயன்படுகிறது. Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் Windows 7 Operating System கட்டாயம் இருக்க வேண்டும். உங்கள் மடிகணனி/ கணனி எனில் Wireless Device -ம் இணைத்திருக்க வேண்டும்.
விர்சுவல் ரௌட்டர் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி: Download virtual router download for windows 7
- முதலில் சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளவும்.
- நிறுவிய Virtual Router மென்பொருளை திறந்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும், அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும், Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு கடவுச்சொல் கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் கம்பில்ல இணைப்பு பகிரப்படும்.
இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்த வேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த கடவுச்சொல் கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய கைகளில் பயன்படுத்தக்கூடிய அதி நவீன ஸ்மார்ட்போன், டேப்ளட் கணினிகளிலும் இணைய இணைப்பை எளிதாக ஏற்படுத்திப் பயன்படுத்த முடியும்.
அடையாளம் (Labels):
ஆன்ட்ராய்டு (Android),
இனையம் (Internet),
கம்பில்லா தொடர்ப்பு (WIRELESS),
விண்டோஸ் 7(Windows 7)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
வியாழன், அக்டோபர் 09, 2014
ஜி மெயிலில் தேவையில்லாத முகவரியா ??
இன்றைக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது. பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது. அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படுகின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந்தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும்.
ஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச்சலூட்டும் உதவியாக உள்ளது. ஜி மெயிலில் இருக்கும் தேவையில்லாத முகவரியை நீக்க…! நாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர்களின் முகவரியும் பதிவு செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது. இவ்வாறு பதிய செய்யும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம்.
ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும். “Settings” திரை காட்டப்படுகையில், “General” என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் தேர்வு செய்திடவும். இங்கு கீழாகச் சென்று, “Complete contacts for autocomplete” என்று இருப்பதனைக் காணவும். அங்குள்ள “I’ll add contacts myself” என்ற ரேடியோ பொத்தானை தேர்ந்தெடுத்து அமைக்கவும். தொடர்ந்து “Save Changes” என்பதில் சொடுக்கி வெளியேறவும். அடுத்த முறை நீங்களாக பதிவு செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முகவரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது.
அடையாளம் (Labels):
இனையம் (Internet),
கூகுள் (Google),
ஜிமெயில்(Gmail)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014
உலாவியில் குக்கீகள் (Cookies) என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ?
Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாமல் உள்ள இந்த வார்த்தை நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் பெர்சனல் கணினிகளில் Cookies இல்லாமல் நம்மால் வேலையே செய்ய முடியாது என்ற அளவுக்கு அது நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை பற்றிய விரிவான அலசல் தான் இந்தப் பதிவு.
Cookies என்றால் என்ன?
பொதுவாக Cookies என்பது குறிப்பிட்ட தளத்தில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர்க்கு ஒரு சிறிய டெக்ஸ்ட் பைலை அனுப்பும். அது தான் Cookie.
என்ன இருக்கும் அதில்?
தினமும் இணையத்தில் இயங்கும் நாம் நிறைய தளங்களை பார்ப்போம், படிப்போம். அதில் நம் தகவல்களை தருவோம். சில செட்டிங்க்ஸ் மாற்றுவோம், குறிப்பாக மொழி, ஒரு வீடியோ எப்படி தெரிய வேண்டும்? என்பது போன்றவை. ஒரு தளத்தில் நமக்கு விருப்பமான ஒன்றை தேடி இருப்போம், அடுத்த முறை மீண்டும் அந்த தளத்துக்கு செல்லும் போது நம்முடைய முந்தைய வருகையை நினைவில் வைத்து அது தொடர்பான செய்திகளை அடுத்த முறை நமக்கு காட்டும். இதன் மூலம் நம் வேலை எளிதாகும்.
எப்படி செயல்படுகிறது?
இதற்கு உதாரணம் Youtube. தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்ட வகையான காணொளியை பார்த்தால் அது தொடர்பான காணொளிகளை தான் அடுத்த முறை நீங்கள் செல்லும் போதும் காட்டும்.
ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் போதும் இதே நினைவூட்டல்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.
எந்த தளத்தில் நீங்கள் சென்றாலும் அதில் வைரஸ் போன்ற உங்கள் கணினிக்கு பாதிப்பு தரும் எந்த ஒரு விசயத்தையும் இது சேமிக்காது, நினைவூட்டாது. இது தான் இதன் மிகப்பெரிய நன்மை.
அத்தோடு இணையத்தில் காட்டப்படும் விளம்பரங்கள் கூட இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. முக்கியமாக Google Adsense. நீங்கள் இணையத்தில் எதை தேடுகிறீர்கள் என்பதை பொறுத்தே இந்த விளம்பரங்கள் அமையும். இது ஒரு வகையில் உங்களுக்கு நன்மைதான்.
இப்போது இதன் அவசியம் தெரிந்து இருக்கும் உங்களுக்கு. இதை Allow செய்யாமல் விட்டால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய கணினியில் இணையத்தை பயன்படுத்துவது போல இருக்கும். இதனால் முக்கியமாக உங்கள் நேரம் விரயம் ஆகும்.
பல வகையான Cookies கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று Third-party cookie. இதை மிக எளிதாக சொல்லி விடுகிறேன். நீங்கள் இப்போது கற்போம் தளத்தை படிக்கிறீர்கள் பதிவின் மேலே ஒரு விளம்பரம் தெரிகிறது அது ad.123ad.com என்று சேமிக்கப்படும். அடுத்து பிளாக்கர் நண்பன் தளத்துக்கு செல்லும் போது ஒரு விளம்பரம் வரலாம். இப்போது அதுவும் ad.123ad.com என்று சேமிக்கப்படும். இது தொடர் சங்கிலி போல தொடரும். இதை தான் நாம் Third-party cookie என்று நாம் சொல்கிறோம்.
மற்ற சில Cookies
Session cookie – குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்.
Persistent cookie – பல நாட்களுக்கு. கிட்டத்தட்ட எப்போதும்.
Secure cookie – பாதுகாப்பானது என்று சொல்லலாம்.[https என்று உள்ள URL களில் இது Save ஆகும்]
HttpOnly cookie – இப்போதைய ப்ரௌசெர்களில் இருப்பது.
Supercookie - Suffix டொமைன்கள் உடைய Cookie உதாரணம் – .co.uk, co.in
Zombie cookie – விடாக்கண்டன். Delete செய்தாலும் அழியாது. ஆனால் இதனால் தீமை எதுவும் இல்லை.
இதன் நன்மைகள் மேலே சொன்னதிலேயே உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதனால் சில தீமைகளும் உள்ளன.
குறிப்பிட்ட தளங்களுக்குள் நுழைய நீங்கள் ஜிமெயில், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் போது செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம்.
சொந்தக் கணினி அல்லாத இடங்களில் பயன்படுத்தும் போது Cookies save ஆனால், உங்கள் தரவுகள் சேமிக்கப்படுகிறது என்று அர்த்தம். இதிலும் செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம்.
நீங்கள் அல்லாது வேறு யாரேனும் உங்கள் கணினியை பயன்படுத்தினால் உங்கள் தரவுகளை அவரும் அறிவார். அவசியமற்ற தளங்களில் Cookies Save ஆனால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.
இது போன்ற தீமைகளை நீங்கள் தவிர்க்கும் வாய்ப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது. Cookies என்பது உங்கள் ப்ரௌசெரில் நீங்கள் தரும் தகவல்கள் தான். நீங்கள் கொடுக்காமல் குறிப்பிட்ட தளத்தால் எதையும் செய்ய இயலாது. எனவே இவற்றில் பாதுகாப்பாக இருப்பது நம் கைகளில் தான் உள்ளது.
Cookies களை கையாளுவது எப்படி?
நாம் பயன்படுத்தும் உலாவிகளில் தான் Cookies உள்ளது என்றேன். அதை கட்டுப்படுத்தும், கையாளும் செயல்கள் நமக்கு எட்டும்படி தான் உள்ளன. கையாளுவது என்றால் குறிப்பிட்ட தளத்தின் Cookies Save ஆவதை தடுக்கலாம், Third Party Cookies களை தடுக்கலாம். இதை செய்ய Opt-out என்ற ஒரு முறையும் உள்ளது.
அடையாளம் (Labels):
இனையம் (Internet),
உலவி(Browser),
குக்கீகள் (Cookies)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
வியாழன், ஜூலை 17, 2014
இலவச பதிவிறக்க மென்பொருள்கள்
இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருப்பின் பதிவிறக்கம் துண்டிக்கப்படும். மீண்டும் பதிவிறக்கத்தை தொடரும் போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து பதிவிறக்கம் தொடரும். இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமெனில் பதிவிறக்க மென்பொருள் உதவியுடன் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும். இலவசமாக இணையத்தில் பதிவிறக்க மென்பொருள்கள் கிடைக்கிறன. அவை
1.GETGO
இந்த GETGO மென்பொருள் உதவியுடன் நேரிடையாக யுடுப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்புநரி மற்றும் கூகுள் குரோம் உலாவியின் மூலமாக பதிவிறக்கம் செய்யும் போது நேரிடையாக GETGO மென்பொருள் உதவியுடன் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். GETGO மென்பொருள் உதவியுடன் அதிவேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி
2.Free Download Manager (FDM)
இது ஒரு திறந்த மூல மென்பொருள் ஆகும். மேலும் ப்ளாஷ் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவும், இந்த மென்பொருளில் வசதி உள்ளது. இதனை போர்ட்டபிள் மென்பொருளாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி
3.Internet Download Accelerator (IDA)
இந்த மென்பொருள் இலவச பதிப்பாகும். மேலும் உலாவிகளில் இருந்து நேரடி பதிவிறக்கம் செய்யவும். யூடுப் தளத்திலிருந்து காணொளிகளை நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
அடையாளம் (Labels):
அலுவலக மென்பொருள் (Office Software),
இனையம் (Internet),
கணினி மேலாண்மை (Computer Management )
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
திங்கள், மார்ச் 03, 2014
முகப்புப்படத்தில் (வால்பேப்பரில் ) திரைப்படம் பார்க்க புதிய வசதி.
கம்ப்யூட்டரில் பாட்டு கேட்டுக்கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம். பலருக்கும் பரிட்சயமானது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில் மனதுக்கு பிடித்த பாடல்களை ஒலிக்கசெய்த படி வேலை பார்ப்பது இனிமையானதும் கூட!
ஆனால் கம்ப்யூட்டரில் திரைப்படம் பார்த்துக்கொண்டே வேலை பார்ப்பது சாத்தியமா?
டெஸ்க்டாப்பில் திரைப்படம் ஒடத்துவங்கிய பின் கம்ப்யூட்டர் திரையை அத்திரைப்படமே ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால் அதில் உள்ள மற்ற அம்சங்களை பயன்படுத்துவது என்பது கடினமானது. அதோடு படம் பார்த்து கொண்டே வேலை செய்வது என்பதும் கடினமானது தான்.
இருப்பினும் ஏதாவது காரணத்திற்காக டெஸ்க்டாப்பில் படம் பார்த்து கொண்டே கம்ப்யூட்டரிலும் சில வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வழியும் இருக்கிறது.
டெஸ்க்டாப்மூவி என்னும் கம்ப்யூட்டர் செயலி இதனை சாத்தியமாக்குகிறது.இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் அதன் மூலம் கம்ப்யூட்டரில் திரைப்படங்களை வால்பேப்பராக பார்த்து ரசிக்கலாம். அழகிய புகைப்படங்களை டெஸ்க்டாப் வால்பேப்பராக வைத்து கொள்வது போல இந்த செயலி திரைப்படத்தையே வால்ப்பேப்பராக ஆக்கித்தருகிறது.
திரைப்படமே வால்பேப்பராக மாற்றப்படுவதால் டெஸ்க்டாப்பில் உள்ள மற்ற ஐக்கான்கள் எல்லாம் அப்படியே இருக்கும்.எனவே அவற்றில் எது தேவையோ அதனை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த ஐக்கான்களின் விண்டோவின் அளவை இஷ்டம் போல மாற்றியமைத்து கொள்ளலாம் என்பதால் அவற்றை சின்னதாக்கி கொண்டு தொடர்ந்து திரைப்படத்தை பார்த்து கொண்டே இருக்கலாம்.
இந்த செயலி மூலமே படத்தின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். திரைப்படம் பார்த்து கொண்டே கம்ப்யூட்டரை பயன்படுத்துவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.ஆனால் அந்த வசதியை உருவாக்கி தருகிறது இந்த டெஸ்க்டாப்மூவி செயலி.
பால்கோசாப்ட் என்னும் இணையதளத்தில் இருந்து இதனை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.இதைத்தவிர மேலும் பல பயனுள்ள செயலிகள் இந்த தளத்தில் இருக்கின்றன.
இணையதள முகவரி: http://falcosoft.hu/softwares.html#desktopmovie
அடையாளம் (Labels):
ஊடக இயக்கி (Media Player),
கணினி மேலாண்மை (Computer Management )
இடம் (Location):
Coimbatore, Tamil Nadu, India
வெள்ளி, பிப்ரவரி 14, 2014
சற்றே விலகி நில்லேன் சுட்டி !
சுட்டி (கர்சர்) படுத்தும் பாடு என்று புலம்பிய அனுபவம் உங்களுக்கு உண்டா?. சுட்டி (கர்சர்) என்ரால் மவுஸ் கர்சர்.
இணையத்தில் அதிகம் டைப் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி இப்படி புலம்ப நேரலாம். அதாவது டைப் செய்யும் போதெல்லாம் எந்த இடத்தில் டைப் செய்கிறோமோ சரியாக அந்த இடத்தில் மவுசின் கர்சர் கோடு போலவே கைகாட்டி கொண்டிருக்கும்.
சுட்டிக்காட்டுவது தான் இதன் நோக்கம் என்றாலும் டைப் செய்யும் போது மட்டும் இது இடையூறாக தோன்றலாம்.டைப் செய்த எழுத்து சரியானது தானா இல்லையா என்ற சந்தேகத்தை இது உண்டாக்கலாம்.சில நேரங்களில் பார்த்தால் தவறான எழுத்து போல தோன்றும் ஆனால் கர்சரை நகர்த்தி விட்டு கவனித்தால் எந்த பிழையும் இருக்காது.
இது தேவையில்லாத இடையூறு மட்டும் அல்ல கவனச்சிதறலும் கூட!.அதிலும் தீவிர கவனம் கொண்டவர்களுக்கு இது மிகுந்த எரிச்சலை தரும்.
இது போன்ற நேரங்களில் தான் கர்சர் புலம்ப வைப்பதோடு சற்றே விலகியிறேன் பிள்ளாய் என்று நவீன நந்தனாராக கெஞ்ச வைக்கும். இதற்கு அழகான தீர்வாக கர்சரை அப்படியே ஓரங்கட்டி செல்லும் சேவை ஒன்று இருக்கிறது.
பார்க் கர்சர் அசைடு என்னும் அந்த சேவை மூலமாக டைப் செய்யும் போது கர்சர் இடையூறாக இல்லாத அளவுக்கு அதனை இணைய பக்கத்தின் ஏதாவது ஒரு மூளைக்கு நகர்த்தி சென்று விட இந்த சேவை உதவுகிறது.
இந்த சேவை மூலம் கரசரை நகர்த்த முடிவதோடு அது எந்த இடத்தில் நிற்க வேண்டும் என தீர்மானிக்கும் வசதியும் இருக்கிறது.(ஐந்து விதமான இடங்களில் நிறுத்தலாம்).அதோடு மீண்டும் கரசரை பழைய நிலைக்கு கொண்டு வர எத்தனை விசைகள் தேவை என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்.
சுட்டி (கர்சர்) எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கலாம்.எதையும் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்யும் அவசியம் இல்லாமலே இதனை பயன்படுத்தலாம்.
சின்ன சேவை தான். ஆனால் இணையத்தின் பயன்பாட்டை மேலும் மெருகேற்றும் சின்னஞ்சிறிய சேவை.
இந்த சேவைய உருவாக்கியிருப்பது கொல்கத்தாகாராரான அனில் குப்தா என்பவர்.
இணையதள முகவரி: https://sites.google.com/site/aghappy/
அடையாளம் (Labels):
இனையம் (Internet),
கணினி மேலாண்மை (Computer Management )
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
புதன், டிசம்பர் 11, 2013
இலவசமாக அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி செய்ய உதவும் லைன் (Line) பயன்பாடு
நுண்ணறிபேசி(Smartphone) பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச குறுஞ்செய்தி அல்லது அழைப்பு செய்யும் பயன்பாடுகளை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான பயன்பாடுகள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள பயன்பாடு பற்றி இன்று பார்ப்போம்.
Line என்ற இந்த பயன்பாடு மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக குறுஞ்செய்தி அனுப்பலாம். எந்தவிதமான வரையறையும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line பயன்பாடு உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி பதிவு செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.
இது எல்லா நுண்ணறிபேசிக்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும். உங்கள் நுண்ணறிபேசிஇல் இதை நிறுவும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் பதிவு செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு அலைகாலம்.
இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி சமூக வலைத்தளம் போல இயங்கும்.
இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்:
- இலவசமாக அழைப்புகளை செய்யும் வசதி.
- மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சென்றடைகிறது.
- Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
- Group Chat வசதி
- கணினிகளிலும் இயங்கும் வசதி
- முழுக்க முழுக்க இலவசம்.
ஆன்ட்ராய்டு பயனர்கள்:
முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் முகவரி மூலம் உள்நுளைந்து இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து உள்நுளைந்து பின்னர் Install என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ செயல்படுத்தி தரவிறக்கம் செய்யவேண்டும். உங்கள் நுண்ணறிபேசிஇல் நிறுவப்பட்ட பிறகு உங்கள் நுண்ணறிபேசி இலக்கத்தை கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.
Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:
உங்கள் நுண்ணறிபேசிஇல் App Market சென்று Line என்று தேடி தரவிறக்கம் செய்யுங்கள் பின்னர் உங்கள் நுண்ணறிபேசி இலக்கத்தை கொடுத்து பதிவு செய்யுங்கள்.
தரவிறக்க:
மொபைல்
கணினி
தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். என்னை சேர்க்க Search By ID என்பதில் arunstarodc என்று தேடுங்கள்.
Android – க்கு QR Code:
Android பயனர்கள் கீழே உள்ள QR Code ஐ உங்கள் போனில் ஸ்கேன் செய்தும் தரவிறக்கம் செய்யலாம்.
அடையாளம் (Labels):
ஆன்ட்ராய்டு (Android),
இனையம் (Internet),
குறுஞ்செய்தி (SMS),
வலையமைப்பு (Network)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704 India
சனி, டிசம்பர் 07, 2013
கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி?
இன்றைக்கு நிறைய பேருக்கு வழிகாட்டி என்றால் அது கூகுள் மேப் என்று சொல்லலாம். கணினி, அலைபேசி என்று இரண்டிலும் உள்ள இதன் மூலம் தெரியாத ஊர்களில் அங்கே, இங்கே அலைந்து அவஸ்தைபடாமல் எளிதாக நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம். நகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் கொண்டுள்ள இதில், பெரும்பாலான கிராமங்களை குறித்த தகவல்கள் இல்லை. அப்படி இல்லாத இடங்களை, ஊர்களை எப்படி கூகுள் மேப்பில் சேர்ப்பது என்று பார்ப்போம்.
- முதலில் Google Map Maker என்ற தளத்துக்கு செல்லவும். உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Log-in ஆகி கொள்ளவும்.
- இப்போது எந்த ஊரை அல்லது இடத்தை சேர்க்க வேண்டுமோ அந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரை கூகுள் மேப்பில் தேடவும். [அது கூகுள் மேப்பில் இருக்க வேண்டும்.]
- இப்போது உங்கள் ஊரில் உள்ள ஒரு இடம் அல்லது ஊர் எங்கே இருக்கும் என்பது மேப்பை பார்க்கும் போது உங்களுக்கு தெரியவரும். தெரியவில்லை என்றால் Zoom செய்து பார்க்கவும். [Satellite View - இல் தான் பார்க்க வேண்டும்]
- குறிப்பிட்ட இடம் என்று நீங்கள் உறுதி செய்த பின் Map க்கு மேலே உள்ள Add New>> Add a Place என்பதை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது கீழே படத்தில் உள்ளது போல சிவப்பு நிற குறியீட்டை குறிப்பிட்ட இடத்தில் வைத்து Left Click செய்யவும்.
- இப்போது அது என்ன இடம் என்று நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும்.
- இப்போது மேப்க்கு இடது பக்கம் அது குறித்த மற்ற தகவல்களை கொடுக்கலாம். தளம், தொலைபேசி எண், வேலை நேரம், மற்றவை.
- இப்போது Save Button கொடுத்து Save செய்து விடுங்கள்.
- இடது பக்கத்தில் நீங்கள் Add செய்த Place Bending – இல் இருக்கும். சில நாட்களில் அது உறுதி செய்யப்பட்ட பின் அங்கே சேர்க்கப்பட்டு விடும்.
- இதே போல ஆறு, ஏரி, குளம், பார்க், கட்டிடங்கள் போன்றவற்றை குறிப்பிடும் போது ஒரு லைன் அல்லது கட்டம் போன்று குறிக்க வேண்டும். அவற்றை மேப்பில் சேர்க்க Step 4 இல் Draw a Line, Draw a Shape என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
- இப்போது ஒரு Plus Symbol மேப்பில் இருக்கும். அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்து ஒரு கிளிக் செய்தால் ஒரு Pointer உருவாகும், அடுத்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து கிளிக் செய்தால் இன்னொரு pointer உருவாகும். அங்கேயே முடிக்க Double Click செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையில் இப்போது ஒரு லைன் உருவாகி இருக்கும். அவற்றை பற்றிய தகவல்களை கொடுத்து Save செய்து விடுங்கள்.
- இதே போலவே தான் Draw a Shape -க்கும் செய்ய வேண்டும்.
நன்றி: teachtoit blog
வியாழன், டிசம்பர் 05, 2013
கணினி ரேம் நினைவகம வகைகள் (RAM Types)
அடையாளம் (Labels):
கணினி மேலாண்மை (Computer Management ),
தகவல்(Information)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
புதன், டிசம்பர் 04, 2013
இணையதளத்தை கண்டுபிடித்தது யார்?
இணையதளத்தை கண்டுபிடித்தது யார்? என்று உங்களுக்குத்தெரியுமா?
இதற்கான பதில் டிம் பெர்னஸ் லீ (Tim Berners Lee) என்பது தான்.
டிம் பெர்னஸ் லீ தான் வைய விரிவு வலையை கண்டுபிடித்தவர். இணையத்தில் ஒரு அங்கமான வைய விரிவு வலை 1993 ல் உதயமான போது தான் உலகின் முதல் இணையதளம் உருவானது. சரியாக சொல்வதானால் வலைமனை.
1969 ல் அர்பாநெட்டாக உருவான இணையத்தின் ஒரு அங்கமாக எல்லோரும் பார்க்ககூடிய வகையில் வைய விரிவு வலையை செர்ன் ஆய்வு கூடத்தில் டிம் பெர்னஸ் லீ உருவாக்கினார். இதற்கான பூர்வாங்க பிரவுசர் மற்றும் இணைய பக்கங்களில் இணைப்புகளை தோன்றச்செய்வதற்கான ஹைபர்டெக்ஸ்ட் வசதி எல்லாம் அறிமுகமான போது இணையதளங்களும் பிறந்தன.
இந்த திட்டத்திற்காக அமைகப்பட்ட வலை மனையே உலகின் முதல் இணையதளமாக கருதப்படுகிறது .அதன் முகவரி http://info.cern.ch/ உலகின் முதல் சர்வரும் இது தான்.
வலையை உருவாக்கி இணைய புரட்சிக்கும் வித்திட்ட டிம் பெர்னரஸ் லீ பற்றி அறிய http://home.web.cern.ch/about/birth-web
அடையாளம் (Labels):
இனையம் (Internet),
தகவல்(Information)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
சனி, நவம்பர் 30, 2013
இரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்
பர்ன் நோட் என்னும் தளம் படித்தவுடன் செய்திகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கிறது.
நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புவதாக கூறும் இந்த தளம் தான் சாத்தியமாக்கும் ரகசியம் மற்றும் நம்பகத்தன்மையை மிக மிக விரிவாகவே உறுதி செய்கிறது.
முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் செய்தியை டைப் செய்தவுடன் அதற்குறிய இணைப்பு முகவரி ஒன்றை தருகிறது.இந்த முகவரியை யாருக்கு அனுப்பி வைக்கிறோமோ அவர்கள் மட்டும் தான் அதனை படிக்க முடியும்.அவர்களும் கூட குறிப்பிட்ட நேரம் வரை தான் படிக்க முடியும்.அதன் பிறகு அந்த செய்தி இணைய வெளியில் மறைந்து விடும்.
செய்தியை எத்தனை நொடிகள் பார்க்கலாம் என்பதையும் அதற்கு பாஸ்வேர்டு தேவையா என்பதை கூட அனுப்புகின்றவரோ தேர்வு செய்து கொள்ளலாம்.பாஸ்வேர்டு பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு மட்டும் தான்.ஆனால் செய்தி அனுப்ப உறுப்பினராக வேண்டும் என்ற நிபந்தனையில்லை.
எந்த செய்தியும் ஒரே ஒரு முறை மட்டுமே படிக்க முடியும்.பர்ன் நோட்டும் தனது சர்வர்களில் எந்த செய்தியையும் சேமித்து வைப்பதில்லை என்று உறுதி அளிப்பதால் அந்த செய்தியின் ஆயுள் அவ்வளவு தான்.அதனை மீண்டும் உயிர்பிக்க செய்வது எந்த வகையிலும் எவருக்கும் சாத்தியமில்லை என்றும் சொல்லப்படுகிறது.உறுப்பினராக இருந்தால் செய்தி படிக்கப்பட்டு விட்டதா என்னும் பதிலை தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு.
படித்தவுடன் கிழித்து எரிந்து விடவும் என்று சில கடித்தங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லவா அந்த வகையான செய்திகளுக்கு இந்த தளம் மிகவும் ஏற்றது.
இரகசிய செய்திகளை யாரும் நகலெடுக்கவோ அல்லது அந்த இணைய பக்கத்தையோ மொத்தமாக ஸ்கிரின்ஷாட் போல சேமிப்பதோ சாத்தியமில்லை என்றும் இந்த தளம் உறுதி அளிக்கிறது.இந்த செய்திக்கான பக்கத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்தாலும் அந்த பக்கம் காலியாக தான் இருக்குமாம்.
யாருக்கு அனுப்பபட்டதோ அவரால் செய்தி பார்க்கபடவில்லை என்றாலும் 72 மணி நேரத்தில் செய்தி தானாக மறைந்து விடுமாம்.
நம்பகமான முறையில் தகவல்களை அனுப்ப இதனை பயன்படுத்தலாம்.ஆனால் சட்ட ரிதியிலான காரணங்களுக்காக செய்தியின் நகலை பாதுக்காக்க வேண்டிய தேவையிருந்தால் இந்த சேவையை பயன்படுத்துவது ஏற்றதல்ல.இது போன்ற விஷயங்களுக்கு எதற்கும் ஒரு முறை இந்த தளத்தின் பிரைவசி கொள்கையை படித்து விடுவது நல்லது.
இணையதள இணைப்பு : https://burnnote.com/
ஆன்ட்ராய்டு பயன்பாடு : https://play.google.com/store/apps/details?id=com.burnnote.BurnNote
ஐஃபோன் பயன்பாடு : https://itunes.apple.com/us/app/burn-note/id619517212
அடையாளம் (Labels):
இனையம் (Internet),
வலையமைப்பு (Network)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
சனி, நவம்பர் 23, 2013
திரையை அம்புக்குறி இல்லாமல் சுலபமாக படம்பிடிக்க
நண்பர்களே உங்கள் கணினி திரையினை படம் பிடிக்க எடுக்க பல்வேறு வகையான மென்பொருட்களை பயன்படுத்துவீர்கள். அனைத்து மென்பொருட்களுமே ஒரு வகையில் சிறந்ததாக இருக்கும். ஆனால் அதில் உள்ள அனைத்திலும் ஒரு குறை கணினி திரையினை படம்பிடித்தால் மவுஸின் அம்பு குறி இருக்கும். இதை தவிர்க்க என்ன செய்வீர்கள் சிலர் மவுஸினை திரையின் ஒரு ஓரத்திற்கு கொண்டு போய் வைத்துவிட்டு திரையினை படம் பிடிப்பார்கள். இப்படி செய்யாமல் இந்த மென்பொருளை பயனபடுத்தினால் உங்களுக்கு வேண்டும் என்றால் மவுஸின் அம்புக்குறியோடும் இல்லாவிடில் அம்புக்குறியை வேறு கலருக்கோ அல்லது அம்புக் குறி இல்லாமலும் கணினி திரையினை படம் பிடிக்க முடியும். இந்த மென்பொருளின் பெயர் AeroShot.
நீங்கள் ஏதாவது ஒரு கோப்பினை படம்பிடிக்க வேண்டும் என்றால் அதை திறந்து வைத்து கொண்டு எது வேண்டுமோ அதை நேரடியாக படம்பிடித்து கொள்ளலாம்.
இந்த மென்பொருளின் சிறப்புகள்
- நீங்கள் படம்பிடிக்கும் கணினி திரையினை நேரடியாக உங்கள் யுஎஸ்பி ட்ரைவினில் சேமிக்க முடியும்.
- எந்த வகை ரெசொல்யூசனில் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க முடியும்.
- நீங்கள் வழக்கம் போல இந்த மென்பொருளை நிறுவி விட்டு உங்கள் விசைப்பலகையில் ( விசைப்பலகை = Key Board) விண்டோஸ் கீ + பிரிண்ட் ஸ்கீரின் பட்டன்களை கொடுத்தால் இந்த மென்பொருள் இயங்கி நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அங்கு சேமித்து விடும்.
- இது ஒரு திறந்தநிலை மூல பொருள் என்பதால் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற கவலையில்லை.
- இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, மற்றும் 7 ஆகியவற்றில் இயங்கும்.
- இந்த மென்பொருளின் அளவு வெறும் 256கேபி மட்டுமே.
- இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும். தரவிறக்கி நேரடியாக உபயோகபடுத்த வேண்டியதுதான்
AeroShot மென்பொருள் தரவிறக்க சுட்டி.
அடையாளம் (Labels):
அலுவலக மென்பொருள் (Office Software),
கணினி மேலாண்மை (Computer Management ),
விண்டோஸ் 7(Windows 7)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
திங்கள், அக்டோபர் 21, 2013
எம்பி3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் பாடலை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட பாடலின் இணைப்பு படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Mp32tag பயன்பாட்டை திறக்கவும். தோன்றும் சாளரத்தில் File மெனு பொத்தானை அழுத்தி Add directory யை தேர்வு செய்யவும்.
பின் தோன்றும் சாளரத்தில் குறிப்பிட்ட பாடல்களில் தொகுப்பு கோப்பறையை தேர்வு செய்யவும். பின் அனைத்து பாடல்களும் பட்டியலிடப்படும்.
பின் எந்த பாடலோ அதனை மட்டும் தேர்வு செய்யவும். பின் Extended Tags ஐகானை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக தோன்றும் சாளரத்தில் Add cover பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட படத்தை தேர்வு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.
குறிப்பிட்ட பாடலுக்கு நீங்கள் தெரிவு செய்த படம் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த படம் குறிப்பிட்ட பாடலுக்கு செட் செய்து சேமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தோன்றும்.
பின் குறிப்பிட்ட படமானது நீங்கள் குறிப்பிட்ட MP3 பாடலுக்கு அமைக்கப்பட்டிருக்கும்.
நன்றி : tamilcomputerinfo
அடையாளம் (Labels):
கோப்பு (File),
பாடல் (Songs)
இடம் (Location):
Parumarathupatti, Tamil Nadu 624704, India
வியாழன், அக்டோபர் 17, 2013
யுட்யூப் காணொளியின் பாடல் வரிகளை பெற
உலகின் புகழ்பெற்ற காணொளி தளமான யுட்யூப் தளத்தில் தினமும் பல்லாயிர கனக்கான காணொளிகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. ஒரு சிலர் காணொளியை திரவிறக்கம் செய்யும் முன்னரே அதன் வரிகளை கேட்க விரும்புவர்கள். ஆனால் அவர்களுடைய கணினியில் ஒலிபெருக்கி போன்ற இசை கேட்பு சாதனங்கள் இருக்காது எனவே குறிப்பிட்ட காணொளியை ழுமையாக பதிவிறக்கம் செய்து அதனை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்த பின்னரே அதனை கேட்க முடியும். இதற்கு பதிலாக யுட்யூப் தளத்தில் இருந்து காணொளியை திவிறக்கம் செய்யும் போதே அதன் வரிகளை எழுத்து வடிவில் பெற முடியும்.
இதற்காக நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக யுட்யூப் தளத்திலேயே பெற முடியும். இதற்கு நாம் பயன்படுத்தும் உலாவியில் நீட்சியை இணைத்துகொண்டால் போதுமானது.
இந்த பாடல் வரிக்கான நீட்சியானது நெருப்புநரி, குரோம், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் ஒபேரா உலாவிகளுக்கு மட்டும் உள்ளது.
- நெருப்புநரி உலவிக்கான சுட்டி
- குரோம் உலவிக்கான சுட்டி
- சபாரி உலவிக்கான சுட்டி
- ஒபேரா உலவிக்கான சுட்டி
- இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவிக்கான சுட்டி 32பிட் மற்றும் 64பிட் (IE 8 / 9 / 10)

சுட்டியில் குறிப்பிட்ட இணைப்பினை பயன்படுத்தி உலாவியில் நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை உலாவியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் யூடுப் தளத்தை ஒப்பன் செய்து குறிப்பிட்ட வீடியோவை ஒப்பன் செய்யவும். அப்போது அந்த வீடியோக்கான பாடல் வரி தோன்றும். மேலும் இந்த வசதியை நமது விருப்பபடி மற்றியமைத்து கொள்ளவும் முடியும்.
அமைப்பினை பயன்படுத்தி விரும்பியவாறு இந்த பாடல்வரி நீட்சியை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.
நன்றி: tamilcomputerinfo
செவ்வாய், அக்டோபர் 15, 2013
பிடிஎப் கோப்புகளை பிரிக்க, சேர்க்க மற்றும் பக்கங்களை மறுவரிசைப்படுத்த உதவும் இலவச மென்பொருள்
பிடிஎப் கோப்பினை ஒருமுறை உருவாக்கி விட்டால் அதனை உடைக்கவோ, மறுவரிசைப்படுத்தவோ முடியாது மேலும் இவ்வாறு உருவாக்கும் பிடிஎப் கோப்புகளில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. என்றுதான் பலரும் நினைத்துகொண்டு இருப்பார்கள் ஆனால் பிடிஎப் கோப்பினை விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறக்கவும். Plugins வரிசையின் கீழ் உள்ள இணைப்பினை பயன்படுத்தி பிடிஎப் கோப்பினை தேவைகேற்ப தலைகீழாக மாற்றவும், பிரிக்கவும், இணைக்கவும் வேண்டியவாறு பக்கங்களை திருத்திக்கொள்ளவும். இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.
இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். பிடிஎப் கோப்புகளை திருத்தம் செய்வதற்கு அருமையான மென்பொருள் ஆகும்.
அடையாளம் (Labels):
அலுவலக மென்பொருள் (Office Software),
கோப்பு (File)
இடம் (Location):
Coimbatore, Tamil Nadu, India
சனி, அக்டோபர் 12, 2013
VLC ஊடக இயக்கியில் யூடியூப் காணொளியை நேரடியாக இயக்க
VLC ஊடக இயக்கினது இசை மற்றும் காணொளியை இயக்க உதவும் மென்பொருள் ஆகும். இந்த இயக்கினது தற்போது அதிகமான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமே இந்த மென்பொருளுடைய எளிமையான தோற்றமும். இலவசம் என்ற ஒன்று மட்டுமே ஆகும். விஎல்சி ஊடக இயக்கியில் அதிகமான வசதிகள் மறைந்து உள்ளன. அந்த வகையில் மறைந்துள்ள வசதிதான் நேரடியாகவே யூடியூப் காணொளியை விஎல்சிஊடக இயக்கியில் இயக்கி பார்க்கும் வசதி ஆகும். இதனை செய்ய விஎல்சி ஊடக இயக்கியை திறக்கவும். பின் Media – Open Network Stream என்பதை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்யதவுடன் தோன்றும் சாளரத்தில் காணொளி URLயை ஒட்டவும் செய்யவும். பின் Play என்னும் பொத்தானை அழுத்தவும்.
இப்போது காணொளியை நேரடியாகவே VLC ஊடக இயக்கியில் காண முடியும். கணினியில் ப்ளாஷ் பிளேயர் இல்லையெனில் வீடியோவினை இணையத்தில் காண முடியாது. அதுபோன்ற சமயங்களில் இந்த VLC ஊடக இயக்கியி உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். காணொளியினை கோப்பை மாற்றி சேமிக்கும் வசதியும் உள்ளது.
அடையாளம் (Labels):
ஊடக இயக்கி (Media Player),
கோப்பு (File),
யுட்யூப் (Youtube)
இடம் (Location):
Coimbatore, Tamil Nadu, India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

































