கணினியில் பென் டிரைவ் ( PEN DRIVE ) மெமரி கார்டு ( MEMORY CARD) போன்றவற்றை பயன்படுத்திய பின்னர் சிஸ்டம் டிரேவிற்கு சென்று "Safely Remove Hardware" எனும் ஆப்சனை தேர்வு செய்த பின்னர்தான் பென் டிரைவ் , மெமரி கார்டு போன்ற சாதனங்களை , USB போர்ட்டிலிருந்து நீக்க முடியும்.
இதில் சிரமம் என்னவெனில் ஒரு சிலருக்கு சிஸ்டம் டிரேவில் ஒரு மூலையில் ஒளிந்து கிடைக்கும் சிறிய ஐகானை (ICons) தேர்வு செய்து , பின்னர் "Safely Remove Hardware" ஆப்சனைத் தேர்வு செய்வது , கடினமான செயலாக இருக்கும். இதற்கு குறுக்கு வழி இருந்தால் சிரமம் இல்லாமல் இருக்கும்.
அதற்கான தீர்வு இதோ :
நாமே எளிதாக குறுக்கு வழியை எளிமையாக உண்டாக்கலாம்.
- Desktop ல் ஏதேனும் ஒரு காலி இடத்தில் வலது கிளிக் செய்யவும்
- தோன்றும் மெனுவில் New ---> Shortcut என்பதை கிளிக் செய்யவும்.
- LOCATION எனும் பெட்டியில் கீழ்க்கண்டவாறு தட்டச்சு செய்து , NEXT பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- RunDll32.exe Shell32.dll,Control_RunDLLhotplug.dll
- உருவாக்கிய குறுக்கு வழிக்கு ஒரு பெயரினை கொடுத்து FINISH பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது உருவாகியிருக்கும் குறுக்குவழி (Shortcut) வலது கிளிக் செய்து PROPERTIES யை தேர்வு செய்யவும்.
- இப்போது தோன்றும் விண்டோவில் குறுக்கு வழி எனும் பெட்டியில் கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த KEY COMPINATION ( சான்றாக Ctr + F2) ஐ தேர்வு செய்து OK பட்டனை கிளிக் செய்யவும்.
- மேற்க்கண்ட வழிமுறைகளை சரியாக செய்தபின்னர் மிகவும் எளிதாக பென் டிரைவ், மெமரி கார்டு போன்ற சாதங்களை எளிதாக நீக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக