வெள்ளி, ஜூன் 14, 2013

STAND BY MODE என்றால் என்ன என்று தங்களுக்கு தெரியுமா!


                   Stand By Mode என்றால் என்ன என்று தங்களுக்கு தெரியுமா! இது தங்களின் கணினியின் மின்சார பயன்பாட்டை குறைக்க பயன்படும் ஓர் செயல்முறை. நீங்கள் ஏதேனும் ஓர் செயலை தங்களின் கணினியில் மேற்கொண்டுயிருக்கீறிர்கள், அப்போது தங்களுக்கு ஓர் அவசர வேலை ஒன்று செய்ய வேண்டியுள்ளது. 5நிமிடம் அல்லது 10நிமிடம் வேலை என்றால் சரி... கணினியை, விட்டு அந்த வேலையை மேற்கொள்ளலாம். இதுவே 1 அல்லது 2 மணி நேர வேலையென்றால் நீங்க என்ன செய்வீங்க. தங்களின் கணினி வேலையை நிறுத்திவிட்டு, தங்களின் அவசர வேலையை மேற்கொள்வீர்கள். சிலர் கணினியை ஆப் செய்யாமலே விட்டுவிடுவார்கள். இந்த மாதிரி செயலினால் தங்களின் மின்சார செலவு அதிகரிக்கும். மேலும் இந்த கோடை காலத்தில் ஏசி இல்லாதவர்கள் அதிக நேரம் கணினியை பயன்படுத்த கூடாது. மேலும் ஓர் செயலை நாம் தற்காலிகமாக் நிறுத்திவிட்டால் அதை தொடர்ந்து மேற்கொள்ளும் போது அதே உற்சாகம் இருக்கும் என கண்டிப்பாக கூற முடியாது. இதற்கு தீர்வு தான் என்ன.

                    மேற்கொண்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஓரே எளிய தீர்வு. Stand By Mode தான். இதனை எப்படி மேற்கொள்வது, இதற்கு முதலில் Start பட்டனை அழுத்தி Turn Of Computer என்பதை கிளிக் செய்யவும். அதில் Stand By என்பதனை கிளிக் செய்ய்வும். அவ்வளவு தான்.

                   அது சரி இதன் பயன் மற்றும் செயல் என்ன. அதாவது நீங்கள் மேற்கொண்ட செயல்முறைகளை மேற்கொண்டால் Stand By முறை செயல்படுத்தப்படும். இந்த முறை செயல்படுத்தப்பட்டவுடன் தங்களின் கணினி ஆப் ஆகிவிட்டதை போல் தோன்றும் ஆன் ஆப் ஆகாது. தங்களின் கணினியுடன் இணைக்கப்பட்டு உள்ள கீ-போர்ட், மவுஸ், சிபியு போன்றவற்றை தொட்டாலோ அல்லது அசைத்தாலோ தங்களின் கணினி மீண்டும் இயக்கப்படும். இயக்கப்படும் என்றால் கடைசியாக தாங்கள் என்ன மேற்கொண்டு இருந்தீர்களோ அது அனைத்தும் அப்படியே செயல்பட்டு கொண்டுயிருக்கும். உதரணமாக: Stand By முறை செயல்படுத்தும் முன்பு தாங்கள் பிரவுசர் மற்றும் நோட்பேட் பயன்படுத்திகொண்டுயிருந்தால். மீண்டும் கணினி ஆன் ஆகும் போது அவை அனைத்துமே செயல்ப்பட்டு கொண்டுயிருக்கும்.

இதன் சிறப்பு மற்றும் பயன் என்ன?

                      நீங்கள் Stand By முறையில் தங்கள் கணினியை செட் செய்தவுடன், தங்களின் கணினியின் சிபியு மின்சார சேவை நிறுத்தப்படும். இதனால் மின்சார சிக்கனத்தை மேற்கொள்ளலாம். இனி தாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானலும் தங்களின் கணினியை Stand By Modeயில் போட்டு வைக்கலாம். மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.  மேலும் தங்களின் கணினி வேலையிலும் எந்த தடையும் இருக்காது.

                     நன்றி! இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், மறக்காமல் வோட்டு, வாக்களியுங்கள் அப்போது தான் இந்த செய்தியை தங்களை போன்று பலர் பார்த்து பயன் அடைவார்கள். தங்களின் வருகைக்கு நன்றி!.

கருத்துகள் இல்லை: